யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கிளிநொச்சி பளை, இயக்கச்சி பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து நேற்றிரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவ நேரம் வளைவு ஒன்றின் அருகில், மற்றுமொரு வாகத்திற்கு செல்ல இடமளித்த போதே குடை சாய்ந்தததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து பேருந்தின் சாரதி பேருந்தை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொது மருத்துவமனையில், உயிரிழந்த இருவரின் சடலங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 18 பேர் சிகிச்சைக்காக இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



0 Responses to யாழ் - கொழும்பு பஸ் கிளிநொச்சிக்கு அருகே விபத்து : இருவர் பலி