Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் துபாய் அருகே கடலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் தோப்புவலசையை சேர்ந்த சேகரின் வீட்டுக்கு சென்று அவரது குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு தமிழர்களின் உயிரை பற்றி கவலை இல்லை. தமிழர்களுக்கு எதிரான அரசாக மத்திய அரசு உள்ளது.

தமிழர்கள் பாதிக்கப்பட்டால் கேட்க யாரும் இல்லை. ஆனால் கேரளாவில் பாதிக்கப்பட்டால் உடனே நீதி கிடைக்கிறது. காரணம் கேரளத்தினர் அதிகார மட்டத்தில் பரவி உள்ளதோடு இன உணர்வோடு உள்ளனர். அந்த இன உணர்வு தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லை.

தமிழர்களை சுட்டதற்கு அமெரிக்கா கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை மட்டு மல்ல முதலமைச்சர் ஜெயலலிதா எந்த பிரச்சினை குறித்து பேசினாலும் கூட்டணியில் இல்லாததால் காங்கிரஸ் காதுகொடுத்து கேட்காது.

காங்கிரஸ் தயவு இல்லாமல் உள்ள மாநில ஆட்சியை அது விரும்பவில்லை. இதனால் மாநில அரசை மத்திய அரசு மதிப்பதில்லை.

தமிழகத்துக்கு உரிய ஒதுக்கீடுகளை தராமல் பழிவாங்கி வருகிறது. மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு அமெரிக்காவை கண்டித்து அறிக்கை தரக்கூட பிரதமருக்கு துணிவு இல்லை.

சிறிய நாடான இலங்கையை பார்த்தே மத்திய அரசு பயப்படும் போது அமெரிக்காவை கண்டிப்பதோ, இழப் பீடு பெற்று தருவதோ நடக்காத காரியம்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா முற்றப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் தமிழர்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

தமிழக மீனவர்களை காக்க மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழக கட்சிகள் கூட நடவடிக்கை எடுக்க வில்லை. இதேபோல பதவியில் உள்ள தமிழக காங்கிரசாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. பலியான சேகரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு பெற்று தந்து அரசு வேலை கிடைக்கவும், சேகரின் உடலை கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெசோ மாநாடு நடத்துவது கேலி கூத்தான செயல். இதனால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை’’என்று தெரிவித்தார்.

0 Responses to ஜெயலலிதா எந்த பிரச்சினை குறித்து பேசினாலும் கூட்டணியில் இல்லாததால் காங்கிரஸ் காதுகொடுத்து கேட்காது: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com