Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

29.07.2001 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருணசீலன் மற்றும் 2ம் லெப். புஸ்பானந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

29.07.2001 அன்று திருக்கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில்

லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்) (மாணிக்கம் ரவிக்குமார் – பாண்டிருப்பு,

மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன் (தட்சணாமூர்த்தி தவநேசன் – தம்பிலுவில், அம்பாறை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 Responses to லெப்.கேணல் அருணசீலன் – 2ம் லெப்.புஸ்பா​னந்தன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com