Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 27ம் திகதி, லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கழாவின் போது, கொடி ஏந்தி சென்ற இந்திய அணியுடன் மர்மப் பெண் ஒருவர் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மர்மப் பெண் யார் என்று அறியும் முயற்சியில் ஒலிம்பிக் சங்கம் விசாரணை துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழா கோலாகலமாக கடந்த 27ம் திகதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அப்போது அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தியபடி, அணிவகுத்து செல்கையில் இந்தியக் கொடியை மல்யுத்த வீரர் சுசில்குமார் ஏந்திச்செல்ல இந்தியாவின் 40 வீரர், வீராங்கணைகளும் 11 அதிகாரிகளும் அவர் பின்னால் அணிவகுத்து சென்றனர்.

அப்போது சிவப்பு நிற மேலாடையும், துருக்கிய நீற்காற்சட்டையும் அணிந்திருந்த அவர் இந்திய கொடியை ஏந்திச்சென்ற மல்யுத்தவீரர் சுசில் குமாருக்கு அருகில் சென்றார். அனைவரும் கழுத்தில் தமது ஐடி கார்டை தொங்கவிட்டிருக்க அவர் மட்டும் போட்டிருக்கவில்லை.

அந்தப்பெண் எம்முடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை. ஆனால், நாம் இது தொடர்பில் ஒலிம்பிக் ஒழுங்கமைப்பு குழுவினருடன் பேசவேண்டியுள்ளது என இந்தியாவின் தற்போதைய Contingent குழுத்தலைவரான பி.கே.முரளிதரன் ராஜா தெரிவித்துள்ளார். அவர் யாரெனவும் தெரியவில்லை. எதற்காக இந்திய குழுவினருடன் அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரியவில்லை.

சுமார் 10 செக்கன்களுக்கு மேல் அவர் இந்திய அணியுடன் நடைபெற்றுவந்த காட்சிகள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டுள்ளன. இப்பெண்ணை அனுமதித்து, உலகின் முன்னாள் எம்மை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டார்கள் என ஒலிம்பிக் தொடக்கவிழா ஒழுங்கமைப்பு குழுவினர் மீது பி.கே.எம்.ராஜா மேலும் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

இச்சம்பவத்திற்கு லண்டன் போட்டி ஒழுங்கமைப்பு குழுவினர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு : அப்பெண் பெங்களூரை சேர்ந்த ஒரு இளம்பட்டதாரி எனவும், தற்போது லண்டனில் வசிக்கும் அவர், இப்புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து நண்பர்களுக்கு காட்டியுள்ளதகாவும், எனினும் இது ஆபத்தான விவகாரமாகியுள்ளதால் தனது பேஸ்புக் அக்கவுண்டை டிஅக்டிவேட் செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெக்கான் குரோனிக்கல் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

0 Responses to லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய அணியுடன் அணிவகுத்து வந்த மர்மப்பெண்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com