30.6.2012 சனிக்கிழமை யேர்மனி கல்விக்கழகத்தின் தென்மேற்கு மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகள் சார்புறுக்கன் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ் கல்விக்களகத்தின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திருமதி யஸ்ரின் உதயதேவி அவர்களும்,த.க.க. தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளர் திரு.பாஸ்கரமூர்த்தி அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.
தொடர்ந்து யேர்மனியத் தேசியக் கொடியினை த.க.க. தென்மேற்குச் செயற்பாட்டாளரில் ஒருவரான திரு.யோகலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.பின் தமிழீழத் தேசியக் கொடியினை நாட்டுப்பற்றாளர் திரு.பரமேஸ்வரன் அவர்களின் துணைவியார் திருமதி யமுனா பரமேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.த.க.களகத்தின் கொடியினை த.க.க. விளையாட்டுத் துணைப்பொறுப்பாளர் செல்வி கஸ்தூரி லோகநாதன் அவர்க்ள ஏற்றிவைத்தார்.
இன் நிகழ்வைத்தொடர்ந்து தேசியக் கொடிக்கு தமிழாலயமாணவர்களின் மிகவும் சிறப்பான அணிவகுப்பு மரியாதை வளங்கப்பட்டது.
இப்போட்டிகளில் இம்மாநிலத்தில் உள்ள ஒன்பது தமிழாலயங்கன் 281 மாணவ மாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளின் விபரம்.
Saarbrücken- 629
Landau- 206
Bruchsal- 164
Sulzbach- 123
Frnkfurt-104
Bad Schwalbach-23
Dillingen-15
Kaiserslautern- 15
Konz- 11
தென்மேற்குமாநிலத்திற்கான மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2012
பதிந்தவர்:
ஈழப்பிரியா
01 July 2012
0 Responses to தென்மேற்குமாநிலத்திற்கான மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2012