இந்தவருட இறுதியில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ள சர்வதேச மீளாய்வு திட்டத்தின் போது அதனை மேற்கொள்ளும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்
சிவ்சங்கர் மேனன் கடந்த வெள்ளிக்கிழமை ஒருநாள் பயணமாக இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இதன்பின்னர் இந்திய ஊடகவியலாளர்களிடம் உரையாடிய அவர், இலங்கை நிலவரங்கள் தொடர்பில் இந்த வருட இறுதியில் ஜெனீவாவில் ஆராயும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியா, தமது இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
13 வது திருத்தச்சட்டம் தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்டபோது, இலங்கையின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே அதனை அமுல்படுத்த வேண்டியது இலங்கையை பொறுத்ததாகும் என்று மேனன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் நாடாளுமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்செய்யுமாறு கட்டாயப்படுத்தவேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்றும் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதியில் நடக்கப் போவதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும்: சிவ்சங்கர் மேனன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
01 July 2012
0 Responses to இந்த வருட இறுதியில் நடக்கப் போவதை இலங்கை நினைத்துப் பார்க்க வேண்டும்: சிவ்சங்கர் மேனன்