Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கரும்புலிகள் நாள் 2012 (காணொளி இணைப்பு)

பதிந்தவர்: ஈழப்பிரியா 04 July 2012

கரும்புலிகள் நாள் யூலை 5ம் திகதி 1987 – தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவு வணக்க நிகழ்வு இந்த “தற்கொடையாளர் நாள்”.

முதலாவது தற்கொடையாளியாய்
தமிழீழத்திலிருந்து 05.07.1987′ல்
கரும்புலி கப்டன் மில்லரும் !!!
” தமிழ்நாட்டிலிருந்து 11.11.1993′ல்
கரும்புலி லெப் செங்கண்ணனும்
உதிராத உயிராயுத உயிர்பூவாய்…!!!

அன்றும் இன்றும் என்றும்
தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது ~ இந்த உயிராயுதம் தான் [♥]

” போடா தமிழா போடா
கரும்புலி மில்லர் காட்டிய வழி நீ
போடா தமிழா போடா

மோதி ஏதிர்த்து மலையாய் இருபினும்
…மூச்சால் உடைக்கலாம்
உயர் நீதி உயிர்வாழ உயிரை நீ விடு
வெற்றி படைக்கலாம்

நெல்லியடியிலே மில்லர் தன்சாவை
வண்டியில் ஏற்றி பறந்தானே
பொல்லா வெறியர்கள் சாக தன்உயிரை
போக்கி மின்னலாய்மறந்தானே

வளரும்காலத்தில் மலரும்காலத்தில்
வசந்தகாலத்தில் விழுந்தமரம்
இளைய மாவீரன்மில்லர் தியாகம்தான்
இன்பதமிழீழம் கொண்டுவரும்.

BLACK TIGERS DAY – 05 JULY 2O12

0 Responses to கரும்புலிகள் நாள் 2012 (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com