மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று 2 வது நாளாக கிழக்கு வடகிழக்கு மாநிலங்கள் இருளில் மூழ்கின.
மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு இன்று 2 வது நாளாக கிழக்கு, வடகிழக்கு, வடக்கு என்று மொத்தம் 14 மாநிலங்களில் மின் இணைப்பு இல்லை என்று தெரிய வருகிறது.
நேற்று ஏற்பட்ட கோளாறு சரி செய்யப் பட்டு மின் விநியோகம் சீர்பட்ட நிலையில், இன்று மீண்டும் மின்தொகுப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், மொத்தம் 300 ரயில் சேவைகள் பாதிக்கப் பட்டு ஆங்காங்கே ரயில்கள் நின்று கொண்டிருப்பதாகவும், அதில் பயணம் செய்த மக்கள் நடுரோட்டில் நின்றுகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குப் புறப்பட்டவர்கள் நடுரோட்டில் பேருந்துக்கு காத்து நின்றபடியால், சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும், அதை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
கையிருப்பில் உள்ள 1000 மெகா வாட் மின்சாரத்தை பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற முக்கிய கட்டிடங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை என்று பிரித்துக் கொடுத்து சமாளித்து வருவதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் தொகுப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை முக்கிய மின்துறை அதிகாரிகள் சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த மின் இணைப்பு கோளாறு காரணமாக 67 கோடி மக்கள் மின்சாரமின்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்திய மின் இணைப்பில் பாரிய கோளாறு - ரயில் சேவைகள் முடங்கின - 67 கோடி மக்கள் இருளில் தவிப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
31 July 2012



0 Responses to இந்திய மின் இணைப்பில் பாரிய கோளாறு - ரயில் சேவைகள் முடங்கின - 67 கோடி மக்கள் இருளில் தவிப்பு