சிரிய அலிப்போ நகரத்தில் இன்று செவ்வாயும் தொடர்ந்து மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன.
ஐ.நாவின் போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் மீது சிரியப் படை தாக்குதல் நடாத்தி பலர் காமடைந்துள்ளதாக பான் கி மூன் சற்று முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆஸாட் றெஜீம் பதவி விலகி செல்ல வேண்டுமானால் அலிப்போ நகரத்தை போராளிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.
இந்த நகரம் சிரிய தலைநகரில் மக்கள் தொகை கூடிய பாரிய வர்த்தக நகரமாகவும், பொருளாதார இரிசாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸாட்டின் வீழ்ச்சி இந்த நகரத்தில் போராளிகள் பெறும் வெற்றியிலேயே தொங்கி நிற்பதாக மேலைத்தேய ஆய்வாளர் கூறுகிறார்கள்.
அலிப்போ நகரத்திற்கும் துருக்கி எல்லைக் கடவைக்குமான தொடர்பை ஏற்படுத்தும் பிரதான சாலையை போராளிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஆயுத, உணவு சப்ளை தாராளமாக நடைபெறுகிறது.
நகரம் பேய் நகரமாக மாறியிருக்கிறது, ஒட்டுமொத்த அழிவை செய்து முழு நகரத்தையும் கொழுத்தி சுடுகாடாக்க ஆஸாட் படைகள் முயன்று வருகின்றன.
அற நனைந்தவனுக்கு கூதல் என்ன குளிர் என்ன என்ற நிலை வந்துவிட்டதால் ஆஸாட் படைகள் சர்வதேச போர்க்குற்றத்திற்கு கடுகளவும் அஞ்சாது களமிறங்கியுள்ளன.
இது இவ்விதமிருக்க இங்கிலாந்தில் இருந்த சிரிய அரசின் இராஜதந்திரி கலாட் அல் அயோபி தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருந்த சிரிய தூதரகம் மூடப்பட்ட பின்னர் இவரே ஆஸாட்டின் இராஜதந்திர பிரதி நிதியாக இருந்து வந்தார்.
தனது சொந்த மக்களையே பகைவராக்கி கொலை செய்யும் ஓர் அரசின் இராஜதந்திர தொடர்பாளராக இருக்க தாம் விரும்பவில்லையென்று இவர் பதவி விலகியுள்ளார்.
அதேநேரம் கோம்ஸ் நகரத்தில் ஐ.நா கண்காணிப்பாளர் மீது தாக்குதலை நடாத்தியது சிரிய படைகளா இல்லை போராளிகளா என்ற மர்மமும் நிலவுகிறது.
ஐ.நா கண்காணிப்பாளர் அங்கிருந்து வெளியேற மேலும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் இது நடந்துள்ளது.



0 Responses to அலிப்போ நகரத்தில் தொடர்ந்து நடக்கிறது மோதல்