தமிழர்களுக்கு எங்கு வாழ்தாலும் இன்றைய நிலையில் பல கஷ்டங்களுக்கும் இடையூருக்கும் இடையே வாழ்க்கை அமைந்துள்ளது. தாய்நாட்டில் எமது நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கிறது, தஞ்சம் புகுந்த தமிழ் நாட்டு மண்ணில் செங்கல்பட்டு போன்ற சில முகாம்களில் தமிழர்கள் சிந்திரவைக்குள் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன் நின்று விடாமல் தாயகத்தில் சிங்கள அரசின் பிடிக்குள் வாழ முடியாமல் பாதுகாப்பு தேடி செல்பவர்கள், கடலுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்.
எதுவரை தான் நாம் இந்த வாழ்கையை வாழ்த்து கொண்டு இருக்கப்போகிறோம்?
முள்ளிவாய்காலில் விடுலையை எமது மக்கள் விதைத்து விட்டு செண்டிருக்கிறார்கள்! அவர்கள் விதைத்த விதை இன்று சர்வதேசமெங்கும் குரலாக ஒலித்து கொண்டிருக்கிறது.
இந்த சர்வதேசத்தின் குரலை, தமிழர்களுக்கான தீர்வுக்கு அழைத்து செல்லவேண்டியது கடமை புலம்பெயர் தமிழ் மக்களின் கையிலேயே அடங்கி இருக்கிறது.
தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை நிறுத்தி, தமிழர் நிலங்களின் பாதுகாப்பை ஐக்கியநாடுகள் சபை எடுக்க வேண்டும், இன்று பாலஸ்தினத்தில் நடந்திருப்பது போல் நிலங்கள் அற்ற இனமாக நாம் மாறி விடக்கூடாது, பியாப்ப்ற( நைஜீரியா) இனமக்களின் போராட்டம் போல் ஒரு மில்லியன் மக்களின் அழிவுக்கு பின் அந்த அழிவு, போராட்டம், மக்களின் தியாகம் சரித்திரத்தில் மறக்கப்பட்ட நிகழ்வாக மாறிவிடக்கூடாது, அதே போல் தாயகத்தில் இருந்து உயிர் பாதுகாப்பு தேடி உலகமெங்கும் பறந்து வாழும் தமிழர்களுக்கு, தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும், அதற்கும் மேலாக சிறி லங்கா அரசு தமிழர்களுக்க இழைத்த படுகொலைக்கு சர்வதேச சுயாதின விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எமது போராட்டத்தை தொடர்வோம்.
வரும் புதன் கிழமை ஜூலை 4ம் திகதி முதல் வாரம் தோறும் பிரெஞ்சு பாராளுமன்றம் முன் போராட்டம் தொடரும்.
போராட்ட இடம்: Place Edouard Herriot
காலம்: ஜூலை 4
நேரம்: மாலை 15h30
மெட்ரோ: Assemblée Nationale (Ligne12)
Invalides (Ligne 8 – 13- RER C)
ஓங்கி தொடர்ந்து ஒலிக்கும் தமிழரின் குரல் தான் விடுதலையின் பாதையை திறந்து வைத்திருக்கும்.
ஓங்கி தொடர்ந்து ஒலிக்கும் தமிழரின் குரல் தான் விடுதலையின் பாதையை திறந்து வைத்திருக்கும்!
பதிந்தவர்:
தம்பியன்
01 July 2012
0 Responses to ஓங்கி தொடர்ந்து ஒலிக்கும் தமிழரின் குரல் தான் விடுதலையின் பாதையை திறந்து வைத்திருக்கும்!