Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாமின் டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

சோனியாவும் பிரதமர் பதவியும்

2004- தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது பல்வேறு தரப்புகளிடமிருந்து சோனியா காந்தி பிரதமராக ஒப்புதல் தரக்கூடாது என்று வலியுறுத்தி மின் அஞ்சல்கள் குவிந்தன. ஆனால் சோனியா காந்தியை ஆட்சி அமைக்க அழைக்கும் கடிதத்தை அனுப்பவும் நான் தயாராக இருந்தேன். சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்து இருந்திருந்தால் நானும் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன். ஆனால் ஆச்சரியப்படும்படியாக அவர் மன்மோகன்சிங்கை பிரதமராக பரிந்துரைத்துவிட்டார்

பீகார் பேரவை கலைப்பு

2005-ம் ஆண்டு பீகார் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியபோது குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தேன். இது தொடர்பாக ராஜினாமா கடிதமும் எழுதியிருந்தேன். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் என்னை சமாதானப்படுத்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படும் எனக் கூறினார். இதையடுத்து ராஜினாமா முடிவை கைவிட்டேன் என்று அப்துல்கலாம் அந்த நூலில் எழுதியுள்ளார்.

1 Response to சோனியா விருப்பம் தெரிவித்திருந்தால் பதவியேற்பு செய்திருப்பேன்

  1. Mr. Kalam, are you allright?

    Please take rest, nowdays your statements make people confuse and they lost the respect on you.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com