சிங்கள அரசின் திட்டமிட்ட ஈழத்தமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக யேர்மனியில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனஅவ்வகையில் கடந்த வாரத்தில் யேர்மன் UNESCO அமைப்பு சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் Prof. Dr. rer. nat. Gudrun Kammasch அவர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகள் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டியதோடு தமிழர்கள் மீது பல்வேறு வகையில் சிங்கள அரசு தனது அடக்குமுறையை மற்றும் நிலஅபகரிப்பை மேற்கொள்ளுவதை எடுத்துரைத்ததோடு மனுவும் கையளிக்கப்பட்டது . இச் சந்திப்பில் பேராசிரியர் Prof. Dr. rer. nat. Gudrun Kammasch அவர்கள் ஆழ்ந்த கரிசனையோடு தமிழர்கள் மீது நடாத்தப்படும் அடக்குமுறையை உள்வாங்கியதோடு தாம் ஏற்கனவே இவ்விடையமாக தமது கவனத்தை எடுத்திருப்பதாக கூறினார்.
அத்தோடு ஐரோப்பிய மனித உரிமைகள் சாசன அமைப்பால் (ECCHR) ஒழுங்குசெய்யப்பட்ட "சர்வதேச குற்றவியல் சட்டம் " கோரிக்கையும் மற்றும் உண்மை நிலவரமும் "எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச நாடுகளில் போர்க்குற்றம் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு யேர்மனியில் எவ்வாறு வழக்கு தொடர்வது அத்தோடு எவ்வாறான நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பது ஆராயப்பட்டது . சிறப்பாக யேர்மனிக்கு வருகை தரும் சந்தேகத்துக்குரிய போர்குற்றவாளிகளை எவ்வாறு யேர்மன் அரசதரப்பு சட்டத்தரணிகள் தமது புலனாய்வு நடவடிக்கைகள் ஊடாக கண்காணிக்கின்றனர் என ஆழமாக விவாதிக்கப்பட்து .இவ் நிகழ்வில் யேர்மன் முன்னாள் நீதி அமைச்சர் Prof. Dr. Herta Däubler-Gmelin கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ..
நிகழ்வில் கலந்துகொண்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியால் பின்வரும் கேள்வி முன்வைக்கப்பட்டது : " யேர்மனியில் கடந்த இரண்டு வருட காலமாக துணைத் தூதுவராக கடமையில் இருந்த போர்க்குற்றவாளி ஜெகத் டியாஸ் ஏன் யேர்மனியில் எவ்வாறான அரச தரப்பு அழுத்தமும் அல்லாமல் இருந்தவர் ? அத்தோடு சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் யேர்மன் அரசு இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு காரணத்தால் அதை மேற்கொண்ட இலங்கை அரசின் அதிகாரிகள் மீது எவ்வாறான கண்காணிப்பு இருக்கின்றது ?.
கேள்விக்கு பதிலளித்த அரசதரப்பு சட்டத்தரணிகள் சார்பாக கலந்துகொண்ட திரு Beck அவர்கள் , ஜெகத் டியாஸ்சை பொறுத்தவரை அவர் இலங்கை அரசின் ராஜ தந்திரி பதவியில் இருந்ததால் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படையல் எவ்வித நடவடிக்கையும் எடுக்க ஏலாத நிலைமை இருந்ததாகவும் மற்றும் இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் எல்லைகளை தாண்டி விட்டது என்ற வகையல் இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்திருக்கும் சந்தேகத்தில் தாம் மிகவும் விழிப்பாக தமது புலனாய்வு நடவெடிக்கையை மேற்கொள்ளுவதாக கூறினார் .
இதேவேளையில் மத்திய மாகாணத்தில் நடைபெற்ற இடதுசாரி இளையோர் அமைப்பின் மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் மக்கள் அவை மத்திய மாநில பேச்சாளர் திரு கோகுலன் அவர்கள் கலந்து கொண்டார் , இவ் மாநாட்டில் நடைபெற்ற பயற்சி பட்டறையில் "சர்வதேச நாடுகளில் அடக்கப்படும் தேசிய இனங்களும் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும்" பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது .
குறிப்பாக பாலஸ்தீனிய மக்கள் மீதான அடக்குமுறை அதற்கு எதிரான போராட்டம் , குர்டிஸ்தான் மக்கள் மீதான அடக்குமுறை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டு உரையாடப்பட்டது . அதேவேளையில் தமிழ் மக்கள் மீது தொடரும் இனவழிப்பு மற்றும் நிலப்பறிப்பு ஆகிய விடையங்களும் உரையாடப்பட்டது .
உரையாடலின் இறுதியில் இடதுசாரி கட்சியின் இளையோர் பிரிவு எதிர்காலத்தில் தமது வேலைத்திட்டங்களில் தமிழீழ போராட்டத்திற்கும் தமது முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததோடு மற்றும் மிக விரைவில் மத்திய மாநில இடதுசாரி கட்சி சார்பில் சிங்கள அரசின் திட்டமிட்ட நிலஅபகரிப்புக்கு எதிராக தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்ற உள்ளதாக யேர்மன் இடதுசாரி கட்சியின் மத்திய மாநில பேச்சாளர் திரு Rüdiger Sagel அவர்கள் கூறினார் .அத்தோடு இறுதியில் திரு கோகுலன் அவர்களால் மனுவும் கையளிக்கப்பட்டது .
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
www.vetd.info
நில அபகரிப்புக்கு எதிராக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 July 2012
0 Responses to நில அபகரிப்புக்கு எதிராக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்