ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வை வீழ்த்தி நாட்டின் 13-வது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா, தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதோடு, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்மா, ’’வெற்றிபெற்ற பிரணாப்பை நான் வாழ்த்துகிறேன். நாட்டின் பழங்குடியின மக்க ளுக்கும், என்னை வேட்பாளராக முன்னிறுத்திய அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக நவீன் பட்நாயக், ஜெயலலிதா, அருண் ஜெட்லி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது. அரசியல் பாகுபாடு மற்றும் பாரபட்சங்களால்தான் நான் தோல்வியடைந்தேன்.
ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிகள் பலப்படுத் தப்பட வேண்டும். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலாவது நடத்தை விதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது: சங்மா
பதிந்தவர்:
தம்பியன்
22 July 2012



0 Responses to பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது: சங்மா