சீன தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத கன மழை பெய்துவருகிறது. சுமர் 60 வருடங்களுக்கு பிறகு இவ்வாறு கன மழை பெய்துவருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். பீஜிங் பிரதான விமான நிலையத்திற்கு போக்குவரத்து செய்யவிருந்த 500 க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்தாகியுள்ளன.
பீஇங்கின் ஃபாங்ஷான் மாவட்டத்தில் மாத்திரம் 460 மி.மி மழை பெய்துள்ளது. சுமார் 14,500 பேர் வெள்ள பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இடி மின்னலுடன், இப்படியொரு மழையை தாம் இதுவரை பார்த்ததில்லை. கடும் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதாகவும் இதனால் அங்காங்கே மண்சரிவு விபத்து ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் பீஜிங் நகரவாழ்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



0 Responses to சீனாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம்