பிரிட்டன் குடிவரவுத் திணைக்களம் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையான FIA இன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒலிம்பிக் விஜயத்துக்கான வீசா விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.
இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால் இவர்களின் விஜயம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவுடன் சேர்ந்து ஊடுருவக் கூடிய அழுத்தத்தைத் தரவல்லது என்பதாகும்.
பிரிட்டனை மையமாகக் கொண்டு பாகிஸ்தானின் லாஹூரிலிருந்து வெளிவரும் பத்திரிகையான 'தி சன்' இனால் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் லாஹூரை தலைமையாகக் கொண்டு இயங்கும் 'டிரீம் லேண்ட் டிராவல் ஏஜன்ஸி' எனும் நிறுவனம் ஒன்பது வருடங்களுக்கு முன்னமேயே ஆள் கடத்தல் குற்றத்துக்காகத் தடை செய்யப்பட்டது உறுதிப் படுத்தப் பட்டது.
இதனை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 'தி சன்' நாளிதழின் நிருபரான 'அலி அஸாட்' எனும் சந்தேகத்துக்குரிய தீவிரவாதி பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவுடன் பிரிட்டனுக்குள் வெற்றிகரமாக ஊடுருவத் தேவையான போலிக் கடவுச் சீட்டை பெற்றிருப்பதாகக் கூறியிருந்தது.
இவர் திருட்டுத்தனமாகக் கடவுச்சீட்டைப் பெறுவதற்கும் இலண்டனுக்குச் செல்லும் பாகிஸ்தான் ஒலிம்பிக் குழுவில் போலி அங்கத்தவர் பதவியைப் பெற்றுத் தரவும் லாஹூரிலுள்ள 'அபிட் சோதாரி' எனும் தலைமை அரசியல்வாதி பிண்ணனியிலிருந்து உதவி செய்ததாகவும் 'தி சன்' நாளிதழ் இரகசியமாக ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் ஒலிம்பிக் விஜயத்தை ரத்து செய்தது பிரிட்டன்
பதிந்தவர்:
தம்பியன்
29 July 2012



0 Responses to பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் ஒலிம்பிக் விஜயத்தை ரத்து செய்தது பிரிட்டன்