Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவின் ஈழத்தமிழர்களின் தாயக கோட்பாட்டை பலவீனப்படுத்தும், சிங்கள அரசின் நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பிலான கருத்தரங்கமொன்று கனடாவில் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளான சி. சிறீதரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்து, தமிழர் தாயகம் எதிர்கொண்டுள்ள சிங்கள, இராணுவ, பௌத்த மயமாக்கல்கள் குறித்து விளக்கவுள்ளனர்.

இதேவேளை பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தியும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்க இருப்பதோடு, தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுக்கவுள்ளனர்.

கனடா சிறி அய்யப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் (635 Middlefield Road , Scarborough (Finch/Middlefield) நாளை மாலை 6மணிக்கு இக்கருத்தரங்கம் இடம்பெறுகின்றது.

நில அபகரிப்புக்கு எதிராக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு வலுவூட்ட, புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்ட சமாந்திரமாக தொடர் போராட்டங்கள் உலகத் தமிழர் தேசங்களில் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இக்கருத்தரங்கமானது தாயகத்தினைவும், புலத்தினையும் ஒன்றிணைந்த அரசியல் புள்ளியில் பயணிக்க வைக்கின்ற ஒர் முன்னெடுப்பாக அமையுமென இந்நிகழ்வினை ஒருங்குபடுத்தியுள்ள கனடா தமிழ் அரசியற் செயலவை தெரிவித்துள்ளது.

0 Responses to கனடாவில் நில அபகரிப்பு தொடர்பில் கருத்தரங்கம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கெடுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com