Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெனிசியூலா அதிபர் கூகோ சவாசை பீடித்திருந்த புற்று நோய் முற்றாக அகன்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களால் தனக்கு புற்றுநோய் பரப்பப்பட்டது என்று குற்றம் சாட்டி வந்த சவாஸ் இப்போது புற்று நோயில் இருந்து மீண்ட வெற்றி விழாவை கொண்டாடுகிறார்.

பல்வேறு சத்திரசிகிச்சைகள், கதிர்ப்பு சிகிச்சைகள் என்று பல ஆண்டுகளாக நடைபெற்ற சிகிச்சைக்குப் பின்னர் புதிய பலம் பெற்றுள்ளார், இவரை இனிமேல் அதிபர் மாளிகையில் இருந்து அகற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.

நேற்று திங்கள் பத்திரிகையாளரை அழைத்து தான் ஆரோக்கியமாக இருப்பதை நேரடியாக பார்க்கும் படி கேட்டுக் கொண்டார், ஆகவே ஸவாசின் புதிய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த 1999 முதல் பதவியில் இருந்து அகற்ற முடியாத நபராக இருக்கும் ஸவாஸ் மேலும் ஓர் ஆறாண்டு காலத்தை அதிபர் பதவியில் கழிக்க ஆசை கொண்டுவிட்டார், வரும் மூன்று மாதங்களில் ( அக்டோபர் 07 ) அதிபர் தேர்தல் வருவதால் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அதேவேளை இவர் பதவியில் இருந்தது போதும் இனியாவது பதவி விலகி புதியவர்களுக்கு வழி விட வேண்டும் என்ற கோரிக்கை பிறந்துள்ளது, இதற்கான ஆர்பாட்டம் தலைநகரில் நடந்தது.

ஆனால் ஈரானுக்கு ஆதரவளித்து, தனக்கு புற்று நோயை ஏற்படுத்திய அமெரிக்கா என்று கூறியபடி தேர்தலுக்கு வருவதால் இவரை பதவி விலத்த இயலாது என்பது வாஸ்த்தவமே.

மேலும் யாசர் அரபாத் இஸ்ரேலினால் பொலோனியம் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று எழுந்துள்ள சந்தேகம் கூகோ ஸவாசிற்கு மேலும் வாய்ப்பாக அமையலாம்.

அமெரிக்காவை சகல வழிகளிலும் வெளிப்படையாக எதிர்க்கும் தென்னமெரிக்க தலைவராக இவர் திகழ்கிறார்.

வெனிசியூலா எண்ணெய் வளத்தை விட்டு வெளியேற யாருக்குத்தான் மனம் வரும்.. அதனால்தானோ என்னவோ புற்று நோயையும் வென்று வந்துள்ளார் ஸவாஸ்.

0 Responses to ற்று நோயில் இருந்து மீண்டார் வெனிசியூலா அதிபர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com