Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டும் தமிழக காவல்துறையினர், அதிமுகவினர் மீது வழக்கு என்றால் மட்டும் நீதிமன்றத்தையும், நீதியையும் இழுத்தடித்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் 10.07.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரஞ்சோதி மீதான வழக்கில், ஜூலை 9ஆம் தேதி கண்டிப்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரிக்கும் உதவி ஆணையர் விடுமுறையில் சென்றுவிட்டதாகவும், பரஞ்சோதியின் கையெழுத்துப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

இதிலிருந்தே, அதிமுகவினர் என்றால் காவல்துறையினர் எந்த அளவிற்கு நீதிமன்றத்தையும், நீதியையும், சட்ட விதிமுறைகளையும் இழுத்தடித்து வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

0 Responses to எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் மட்டுமே தமிழக காவல்துறைக்கு அக்கறை! கலைஞர் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com