Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ போராட்ட வரலாற்றில் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் கரும்புலிகள் நாளும் ஒன்றாகும்.

காரணம், தமது உயிரையே ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதுடன் விடுதலைப் போராட்டத்தின் விரைவான முன்நகர்விற்கு மிகவும் உறுதுணையாகவும் மிக முக்கிய காரணமாகவும் அமைந்தவர்கள் கரும்புலிகள்.

நேற்று கரும்புலிகள் நாள் டென்மார்க் Ikast நகரில் உணர்வுடனும், எழுச்சியுடனும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில், தாயக மீட்புப் போரில் மண்ணில் வித்தாகவும், கடலில் காற்றாகவும், விண்ணில் ஒளியாகவும் கலந்துவிட்ட அந்த உன்னதமானவர்களுக்கு மக்கள் அகவணக்கத்துடன் ஈகச்சுடர்ரேற்றினர்.

0 Responses to டென்மார்க்கில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com