Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று காலை ஒடிசா மாநிலத்திலிருந்து சோதனை பார்க்கப்பட்ட அக்னி-2 ஏவுகணை வரிசையில் மற்றொரு ஏவுகனை வெற்றி அடைந்துள்ளது.

அக்னி ரக ஏவுகணைகளை தயாரித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச்சேர்ந்த விஞ்ஞானிகள் ஏவி வருகின்றனர். அவ்வகையில் சமீபத்திய ஏவுகணை சோதனைகளில் அக்னி-2 ஏவுகனை வரிசையில் மற்றொரு ஏவுகணையை உருவாக்கி அதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுதளத்தில் வைத்து இன்று காலை 8.48 மணிக்கு இலக்கை நோக்கி அக்னி-2 ஏவுகணை நிறுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாகவும் அந்த இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் அக்னி-2 ஏவுகணை சென்று தாக்கி அழித்தாகவும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆக அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அவை மேலும் கூறுகின்றன.

இந்த ஏவுகனை அணு ஆயுதங்களை சுமந்து சென்று 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக தெரிவித்துள்ளதுடன் முதல் முதலில் 1999-ல் அக்னி-2 ரக ஏவுகணை சோதனை 1999-ல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

0 Responses to அக்னி 2 ஏவுகணை வரிசையில் மற்றுமொறு ஏவுகணை சோதனை வெற்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com