மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி மகள் அஜிதா, தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழக கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள்.
இதை அறிந்த விடுதி வார்டன் ஆத்திரமடைந்து, நேற்று முன்தினம் காலை மாணவியை அழைத்து வலுக் கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.
இந்நிலையில், மாணவியின் தாயார், நேற்று முன்தினம் இரவு, விடுதி வார்டனை தொடர்பு கொண்டு, தன் மகள் எப்படி இருக்கிறார் என விசாரித்துள்ளார்.
அப்போது அவரிடம், "உங்கள் மகள் நலமாக இருக் கிறார். ஆனால், படுக்கையில் சிறுநீர் கழித்ததால், அவளுக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை கொடுக்கப் பட்டது' என்று, வார்டன் தெரிவித்தார்.
பதறிப்போன மாணவியின் தாய், தன் உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு, விடுதிக்குள் நுழைந்து, தன் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின், மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த, பல்கலைக் கழகம் சார்பில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
விசுவபாரதி பல்கலைக் கழக அதிகாரிகள் இதுபற்றி, "மாணவியை சிறுநீர் குடிக்குமாறு விடுதி காப்பாளர் வற்புறுத்தவில்லை. மாறாக, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, மாணவியை அவளது படுக்கை விரிப்பை நாக்கால் நக்கி சுத்தம் செய்யச் சொன்னார். இது தான் நடந்தது' என்றனர்.இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியை சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது ஒன்றும் தப்பில்லை, நானே எனது சிறுநீரை குடித்து இருக்கிறேன் என்று கூறியுள் ளார் சுவாமி அக்னிவேஷ்.
இதுகுறித்து அவர் மேலும், ‘’ நாடு முழுக்க இந்த செய்தியை மீடியாக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன. எனக்கும் பெட்டில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. எமெர்ஜென்சி காலத்தில், நான் சிறையில் இருந்தபோது இதுபோன்ற சிகிச்சை எனக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு வகையான பாரம்பரிய வைத்தியம். நானும் பலமுறை எனது சிறுநீரை அருந்தியுள்ளேன்.
நான் மட்டும் அல்ல முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், ஹரியானா முன்னாள் முதல்வர் தேவி லால் போன்றவர்களும் இந்த முறையை பின்பற்றி உள்ளனர். ஆகையால் இது ஒன்றும் தப்பு கிடையாது’’ என்று கூறியுள்ளார்.
நானும் சிறுநீரை அருந்தியுள்ளேன்; முன்னாள் பிரதமரும் சிறுநீரை அருந்தியுள்ளார்!
பதிந்தவர்:
தம்பியன்
11 July 2012
0 Responses to நானும் சிறுநீரை அருந்தியுள்ளேன்; முன்னாள் பிரதமரும் சிறுநீரை அருந்தியுள்ளார்!