Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரூம்னி சீக்கியர்களை ஷேக் என விழித்து பேசியது ஊடகங்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஸ்கொன்சின் மாநிலத்தில் குருத்வாரா சீக்கியர்களின் ஆலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து பேசினார் மிட் ரூம்னி. இயோவாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் இது தொடர்பில் பேசுகையில், 'ஷேக்கு கோவிலில் நடந்த துயரமான சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக அமைதியான பிரார்த்தணை தருணத்தில் ஈடுபட்டிருந்தோம். பல காரணங்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததை நான் சுட்டிக்காட்டியிருந்தேன் என சிகாகோவில் நிகழ்த்தப்பட்ட தனது உரை பற்றி கூறினார். ஷேக் மக்கள் சமூகம், மிகவும் அமைதியான, அன்பான தனிநபர்களை கொண்டதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக இலினோய்ஸ் மாநிலத்தில் நடந்த நிகழ்வில் சீக்கியர்களை சீக்கியர்கள் எனவே உச்சரித்த மிட் ரூம்னி, அன்று மாலை இயோவாவில் நடந்த நிகழ்வில் இவ்வாறு மாற்றிக்கூறியது தவறுதலாக இடம்பெற்றதுதான். இதை பெரிது படுத்தவேண்டாம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

0 Responses to சீக்கியர்களை ஷேக் என விழித்துப்பேசிய மிட் ரூம்னி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com