Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியாவின் புதிய அரசியலமைப்புக் குழு நேற்று வியாழக்கிழமை அதிபர் தேர்வுக்காக நிகழ்த்திய வாக்கெடுப்பில் லிபிய புரட்சிப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் சர்வாதிகாரி கடாஃபியின் எதிர்க்கட்சித் தலைவர் முஹம்மட் எல்-மெகாரிஃப் வெற்றி பெற்றுள்ளார்.

லிபிய அரசாங்கத்தின் காங்கிரஸில் உள்ள மொத்தம் 200 பேர் கலந்து கொண்ட இவ்வாக்களிப்பில் மெகாரிஃப் 113 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அலி ஷிடான் மொத்தம் 85 வாக்குகளே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் தற்காலிகமாக ஆட்சி புரிந்து வந்த குழு புதிய அரசியலமைப்புக் குழுவுக்கு தனது அதிகாரத்தை வழங்கிய அடுத்த நாள்
இவ் வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது. இந்த புதிய அரசியலமைப்புக்கு குழு சென்ற மாதம் லிபியாவில் சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சுதந்திரமாக மேற்கொள்ளப் பட்ட தேர்தலிலேயே தெரிவு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெகாரிஃப் அங்கம் வகிக்கும் லிபிய பாதுகாப்புக்கான தேசிய முன்னணிக் கட்சி லிபியாவின் மிகப் பழமையான எதிர்க் கட்சிகளில் ஒன்று என்பதுடன் மோம்மர் கடாஃபி யின் 42 வருட கடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர பல தடவை முயற்சி செய்து வந்த ஒரு கட்சியும் ஆகும்.

மெகாரிஃப் கடாஃபியின் ஆட்சிக்குப் பயந்து 1980 முதல் லிபியாவுக்கு வெளியே பதுங்கியிருந்த இவர் கடந்த வருடம் அங்கு புரட்சி வெடித்து கடாஃபி கொல்லப் பட்ட பின் லிபியாவுக்குத் திரும்பி வந்தார்.

தற்போது லிபியாவின் தேசிய முன்னணிக் கட்சியின் தலைவரான மெகாரிஃப் அங்கு ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் புதிய பிரதம மந்திரி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தலை நடத்துவதற்கு முன் முறையான அரசியலமைப்பு சட்டத்தை வரைவதற்கும் தலைமை தாங்கவுள்ளார்.

0 Responses to கடாஃபியின் எதிர்க்கட்சித் தலைவர் லிபியாவின் புதிய அதிபராகத் தேர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com