இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு.
கேள்வி: உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! 'டெசோ’ அமைப்பு நடத்தும் மாநாடு கருணாநிதியின் அரசியல் கணக்குதானே?
பதில்: இலங்கைத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகளை முதல் இயக்கமாகச் செய்ததும், அதை இப்போதுவரை தொடர்வதும் தி.மு.க-தான். இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் போராடியதற்காகவே தி.மு.க. இரண்டு முறை ஆட்சியை இழந்தது வரலாறு.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை என்கிற வார்த்தையைச் சொல்லக்கூடப் பயந்து ஒளிஞ்சவங்க இப்போ தலைவர் கலைஞரை நோக்கி விரல் நீட்டிப் பேசுறாங்க.
இலங்கைத் தமிழர்கள் குறித்துப் பேசுவதற்கான களமும் தளமும் திரும்ப அமைந்தது தி.மு.க. ஆட்சியில்தான். தலைவர் கலைஞர் எது செய்தாலும் குற்றம் சாட்டுபவர்கள், 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழ் ஈழத்தை உருவாக்கிக் காட்டுவேன்’ என வாக்குறுதி கொடுத்தவர்களை ஏன் மறந்துட்டாங்க?
போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’னு மனசாட்சியே இல்லாமப் பேசினவங்களைக் கேள்வி கேட்க ஏன் ஆளே இல்லை? எல்லாப் பிரச்னைகளுக்கும் தலைவரை மட்டும் விமர்சிப்பவர்கள் கிட்ட, இப்போ ஆட்சியில் இருப்பது தலைவர் கலைஞர் இல்லைனு யாராவது எடுத்துச் சொன்னா நல்லா இருக்கும்.
கேள்வி: ஆனால், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தி.மு.க. இன்றைக்குக் காட்டும் அக்கறையை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோதே காட்டி இருக்கலாமே?
பதில்: ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. என்னங்க செய்யலை? போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கும் தலைவர் எவ்வளவு பாடுபட்டார்னு அந்த முயற்சிகளைப் பாழாக்கினவங்களுக்கு நல்லாத் தெரியும்.
தி.மு.க. மட்டுமே அத்தனை விமர்சனங்களுக்கும் பதில் சொல்லுதுங்கிற ஒரே காரணத்துக்காக, குறை கூறுவதை மட்டுமே முழு நேர வேலையா சிலர் வெச்சிருக்காங்க. இன்னைக்கு யார் வேணும்னாலும், 'பிரபாகரன் என்கிட்ட அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்’னு கற்பனைகளைப் பரப்பலாம். அதை எல்லாம் ஏன் அவங்க அன்னைக்கே சொல்லலை?
போர் முடிந்த பிறகு, அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மூலமாகத்தான் அங்கு இருக்கும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச நன்மையைக்கூடச் செய்ய முடியும். அந்த நோக்கத்தில் அவர்களைச் சந்திக்கப்போனால்... அதற்கும் அடுக்கடுக்காக விமர்சனங்கள்.
ஒருவேளை எங்களை மட்டுமே விமர்சிக்கிறவங்களுக்கு ஜெயலலிதாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றனவோ என்னவோ? இன்னைக்கும் இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்பட்டுட்டுத்தானே இருக்காங்க.
அவங்களுக்கு நல்ல வாழ்க்கைக்கான உத்தரவாதம் அளிக்க ஜெயலலிதா என்ன செஞ்சாங்க? குறைந்தபட்சம் இதைப் பற்றி மத்திய அரசிடம் பேசக்கூட இல்லை. எந்தச் சூழலிலும் எதற்காகவும் ஜெயலலிதாவை விமர்சித்துவிடக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் தலைவர் கலைஞரை விமர்சிக்கிறாங்க.
காரணம், கலைஞரை விமர்சிச்சா, பதில் வரும்... அம்மையாரை விமர்சிச்சா, வழக்கு வரும். இலங்கைத் தமிழர்களின் துயரங் களை யார் அரசியலாக்கினாலும் அது அநாகரிகம். இங்கே இருக்கிற தமிழர்களைக் கைதட்ட வெச்சாலோ, உசுப்பேத்தினாலோ அங்கே இருக்கிற தமிழர்களுக்கு எந்த நல்லதும் நடக்காது!
கேள்வி: டெசோ அமைப்பு மாநாட்டில் தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தப்போவது இல்லை என கருணாநிதி அறிவித்ததற்கு மத்திய அரசின் மிரட்டல் தான் காரணம் என்று சொல்கிறார்களே?
பதில்: தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டுட்டதா கலைஞர் எப்பவுமே சொல்லலை. இலங்கைத் தமிழர்களுக்கான இப்போதைய தேவை... அடிப்படைஉரிமைகளும் வாழ்வாதாரங்களும். அதுக்கு ஒரு தீர்வு கிடைச்ச பிறகே, தனி ஈழக் கோரிக்கை சாத்தியம்.
எதை எப்போ வலியுறுத்தணும்னு கலைஞருக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்சு 'டெசோ’ மாநாடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாருமே தி.மு.க- கிட்ட பேசலை. மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை.
'டெசோ மாநாடு பற்றி பேசிய கனிமொழி விகடனுக்கு வழங்கிய பேட்டியில் இருந்து முக்கிய பகுதிகள்!
கருணாநிதி, மத்திய அரசின் மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை! டெசோ பற்றி கனிமொழி
பதிந்தவர்:
தம்பியன்
09 August 2012
0 Responses to கருணாநிதி, மத்திய அரசின் மிரட்டலுக்குப் பின்வாங்கியதா சொல்வது கற்பனை! டெசோ பற்றி கனிமொழி