2020 இல் ஒரு வல்லரசாக மகுடம் சூட்டிக் கொள்ளவுள்ள இந்தியா தமிழரிற்கு தனிநாடு அமைவதை அனுமதியாது என்பது ஜனநாயக ரீதியில் ஏற்புடையதன்று.
புலிகளின் ஆயுதப் போராட்டத்தை இந்தியா முன்னின்று அழித்த பிற்பாடும் அரச சிறைக்குள்ளேயே தமிழர்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். அப்படியானால் தமிழர்கள் தாங்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா? ஏந்த உயிரும் தான் கொல்லப்படுவதற்கு எதிராக போரிடும். இநதத் தற்காப்பு யுத்தத்தையே தமிழ் இளைஞர்கள் தொடங்கினர்.
அதுவும் எல்லா வழிகளிலும் முயற்சித்து வட்டுக் கோட்டைத் தீர்மானத்தையும் தமிழ் மக்களின் ஆணையாக ஜனநாயக ரீதியல் பெற்ற பின்னர் இந்த முடிவு கண்ணியமான ஜனநாயக மரபைக் கொண்ட தமிழர் கட்சிகளால் எடுக்கப்பட்டது.
எனவே தமிழர்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டு இந்தியா இப்படி ஒரு நிரந்தரத் தடையை போடுவதற்கும், எந்த விதமான நடவடிக்கைகளையும் எடாது இவ்வாறு ஒரு மத்திய அரசின் அமைச்சர் தெரிவித்தமை தொடர்பாகவும், ஈழம் என்ற சொல்லை இந்தியா அனுமதியாது என்ற முன்னயை அரசின் அறிவிப்புத் தொடர்பாகவும் தமிழர்கள் என்ன செய்யலாம் என்பதே தமிழர்கள் முன்னேயுள்ள முதற் கேள்வியாகும்.
ஏற்கனவே இந்தியாவின் தடையைப் பொருட்படுத்தாமல் தனி நாட்டைக் கட்டி எழுப்பியும் இந்தியாவை மீறி அதற்கதான அங்கீகாரத்தை பெற நம்மால் இயலவில்லை.
வளர விட்டு வெட்டிவிடும் இந்தியா தொடர்பான முடிவின்றி புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஈழக் கோஜ அரசியலை இனியும் தொடர்வது அர்த்தமற்றது. ஒன்றில் சீனாவுடன் சேரந்து கொண்ட மகிந்தவைப் போல் இந்தியாவை சிந்திக்க வைக்க தமிழர் எதையாவது செய்ய வேண்டும் அல்லது இந்தியாவுடன் ஏதாவது ஒரு உடன்பாட்டிற்கு வந்தாக வேண்டும் . குட்டக் குட்ட மட்டுமல்ல, வெட்ட வெட்ட வளர்ப்பவனும் மடையனே.
வல்லரசாகும் இந்தியாவை நாடற்ற தமிழராகிய நம்மால் எதிர் கொள்ள இயலுமா? சிங்களவர்கள் கொழும்பில் நடாத்தும் இனரீதியான அரசியலை தமிழகப் பிரதான கட்சிகள் மேற் கொண்டால் ஒழிய தமிழகத்தில் நம்மால் எதையும் செய்ய இயலாது.
திமுக மற்றும் அதிமுக அரசியல் என்பதே மத்திய அரசுடன் யார் உறவு கொண்டாடுவது என்பது மட்டுமானதாகவேயுள்ளது. வேறு கொள்கை இலட்சிய வேறுபாடுகள் எதுவும் இந்தக் கட்சிகளிடம் கிடையாது. இந்த இரண்டு கட்சிகளும் ஒன்று படாவிடினும் சிங்களவர்கள் போல இனத்தின் பொதுவான தேவைகளில் ஒத்தியங்கும் தன்மை காணப்படவில்லை.
அம்மாவின் ஆட்சி கலைஞரின் எதிரி என்றாலும் டெசோ மாநாட்டு விடயத்தில் அதனை தற்போதைய அரசு ஆதரித்திருக்;க வேண்டும். எனவே தமிழகத்தில் தமிழ் இன அரசியலின்றி கட்சி ரீதியிலான அரசியலும், வெளிநாடுகளில் குழு ரீதியலான போட்டி அரசியலும் தொடரும் வரை இன அழிவைத் தடுக்கவே இயலாது.
இன்றைய உலகமயமாக்கல் போட்டி பொருளாதாரத்தில் உலகில் வேகமாக பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்னியின் 8000 கிலோ மீற்றர் ஏவுகணை வீச்சத்தை அதிகரிக்க இந்தியா விரைந்து செயற்படுகிறது. ஒரு மணி நேரத்துள் உலகின் எப்பகுதியையும் எட்டிவிடும் ஏவுகணை உற்பத்தியில் இந்தியா தீவிரமாக உள்ளது.
தவிர இந்தியா அணு ஆயுதக் கட்டுப்பாட்டு இணக்கத்தில் ஒப்பமிடவும் இல்லை. தவிர இந்தியா அனேகமாக எல்லா சக்தியுள்ள நாடுகளுடனும் ஒரு உறவுச் சமநிலையையும் பேணி வருகிறது. அதனோடு எதிர் நிலைப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தமிழர் விரோதப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
உலகின் ஏழாவது பெரிய தேசமான இந்தியா தலை சிறந்த ஜனநாயக நாடாகவும் உள்ளது. அது பற்றி ஒரு உயர்ந்த நன்மதிப்பு உலகம் பூராகவும் தொடரந்து இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கான இன்றைய பிரதான காரணம் காந்தி மகான் தான்.
இரண்டாம் உலகப் போரிற்கு பின்னால் உலகம் பூராகவுள்ள சிறார்களிற்கான ஆரம்பக் பள்ளிக் கூடங்களிற்காக கல்விப் போதனை திட்டங்களில், நாஜி அடெல்வ் கிட்லர் உடன் காந்தி பற்றிய அறிமுகமும் கொடுபடுகிறது. இதனால் இன்றைய உலக மானிட வர்க்கமே இந்தியாவை காந்தி என்ற சாத்வீகக் கண்ணாடியூடாகவே பார்க்கிறது.
புலிகள் என்றவுடன் ராஜீவ் காந்தியின் மரணத்தின் ஊடாகப் தமிழர்கள் பார்க்ப்படுவதைப் போல. இந்தியாவில் தமிழகத்தில் தமிழர்கள் இருப்பதாலும், அவர்கள் ஏற்கனவே தனிநாடு கோரியிருப்பதாலும் இந்தியா தமிழரிற்கு ஒரு நாடு அமைவதை விரும்ப இடமில்லை. இதனை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஒரு ஏமாற்று அரசியலை மத்திய இந்திய அரசு அமுலாக்கி வந்தது.
இனியும் மறைக்க இயலாது என்ற நிலையில் இந்தியா ஈழம் என்ற சொல்லையே அனுமதியாது என்று அது அலுவலக ரீதியாகவும் அறிவித்திருந்தது. அது மீளப் பெறப்பட்டாலும் அதன் உண்மை நிலை அதுவாகவே இருக்கும்.
தாயகத்திலும், தமிழகத்திலும் இருக்கும் தமிழர்களை சிறீலங்காவாலும் இந்தியாவாலும் கட்டுப்படுத்த இயலும். வெளிநாடுகள் பலவற்றிலும் வாழும் ஈழத் தமிழர்கள் உரிய முறையில் செயற்பட்டால் இந்தியாவால் அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் இலகுவான காரியம் அல்ல.
எனவே தான் அது தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பணிவும் கீழ்ப்படிவும் உள்ளவர்கள் என்று பிரித்தானியரிடம் பெயர் பெற்ற ஒரு செம்மையான இனத்தவரை ஆயுத மோகமுள்ள பயங்கரவாதிகளாக உலகிற்கு உருவகம் கொடுத்து வைத்துள்ளது.
ஆயுதத்தை தொடவே அஞ்சும் ஒரு இனத்திற்கு ஆயுதத்தையும் கொடுத்து பயிற்சியும் அளித்து போராடத் தூண்டி விட்டு, அதனைத் தடையும் செய்து, உலகiயே புலிகளிற்கு எதிராகத் திருப்பி முள்ளிவாய்க்காலுள் ஒரு பாரிய யுத்தத்தை நடாத்தி முடித்துள்ளது. இதற்காக அது மேற்கிலிருந்து பிராந்திய நாடுகளை பிரித்து அணி திரட்டிச் செயற்பட்டது.
அதற்கு அது பாவித்த அமைப்புக்களே அணி சேரா அமைப்பு மற்றும் சார்க் போன்றவையாகும். ஐ நா மனித உரிமை அமைப்பில் சிறீலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரனை மீதான வாக்ககெடுப்பை தடுக்க இயலாத நிலையிலேயே அது சிறீலங்காவை ஆதரிக்க இயலாது போனது.
இப்போது தன்னால் தடுக்க இயலாத அந்த விசாரணையை தமிழரிற்கு எதிராகத் திருப்பி இலங்கை இந்திய நீதி மன்றங்களில் உள்ள போர்க் குற்றவாளிக் கூண்டுகளை புலிகளால் நிரப்ப அது முயலலாம் என் இறுதியாக எழுதியிருந்தேன். அதை உறுதி செய்யும் வகையில் இரண்டு தரப்பிலும் விசாரிக்கும் பக்கச் சார்பற்ற விசாரணை பற்றி இந்தியா பேச ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்கு நியாயப்படி ஓரளவு அனுசரணயாக செயற்பட்டதை வழமை போல் இந்தியா மீண்டும் தடுத்து விட்டதாகவே தோன்றுகிறது. எனவே தான் தேர்தலில் வெல்ல பிரணப் முகர்ஜியுடன் இருந்து பேச வல்லதான ஒரு பிரிவிணையைக் கோராத பெயருள்ள அமைப்புக்களை புலம் பெயர் தமிழர்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி எழுதினேன். தவிர நான் தமிழீழத்தையோ புலிகளையோ விரும்பாத சிங்களவன் அல்ல துரோகியும் அல்ல விலை போனவனும் அல்ல.
நாலாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட பொருளாதார வளரச்சியுள்ள இந்தியாவை மீறி எந்த நாடும் தமிழரிற்கு உதவ வாய்ப்பேயில்லை. வெளிநாட்டவர் பலர் இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் பெயர் காரணமாக, குடும்பத் தொடர்பிருப்பதாகக் கூட காரணமின்றி நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறே கடுமையான உழைப்பும் வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் உடைய தமிழர்களை முழு உலகமுமே பயங்கரவாதிகளாக பார்க்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் இந்தியா தான். ஒத்துக் கொள்ளப் படாவிடினும், முழு உலகத்தையும் திரட்டி, ஒரு மூன்றாவது போர் போன்ற ஒரு போரை முள்ளிவாய்க்காலுள் முடித்துள்ள இந்தியாவின் மறு பக்க முகத்தை மறைத்துள்ள திரை இன்னமும் தொங்கிக் கொண்டேயிருக்கிறது.
அருந்ததியா ராய் போல் அந்த மறைப்புத் திரைக்குள்ளேயே இருப்பவர்கள் இந்தியாவில் சிறப்பான பிரதமர்கள் யாருமில்லை என்று தெரிவித்திருந்ததை "தமிழ் வின்" செய்தியொன்று குறிப்பிட்டிருந்தது ஞாபகமிருக்கலாம். அமெரிக்க பாராட்டியுள்ள குஜராத்தின் நரேந்திர மூடியும் சரி , இத்தாலிய ராகுலாகட்டும் இருவருமே மோசமான தலைவர்களாகவே இருப்பார்கள் என அந்த உண்மையான ஊடக உள்ளம் பகிரங்கமாக கூறியிருந்தது.
ஆனால் இராமாணய "ராம்" கூட ஒளித்து நின்று வாலியைக் கொன்ற பாத்திரந்தான். இலங்காபுரி என்ற ஒரு சிறிய தீவிலே பலமான ஒரு உலக தமிழ்க் கோட்டையை கொண்டிருந்த சாம வேதமிசைத்த இராவணன் என்ற ஒரு பிராமணத் தமிழனை அரக்கன் எனச் சித்தரித்து, அவனது பலமான மறத் தமிழரின் ஒரு கோட்டையையும், தனக்கிருந்த பத்து திறமைகளையும் ஏக காலத்தில் பிரயோகிக்க வல்ல ஒருவனின் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையும், இந்த இராவனணையே தன் வாலால் கட்டி சுழற்றிய வாலி என்றொரு இன்னொரு உலக வன அரசனையும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக ராமன் வீழத்திய யுகத்திலிருந்து இந்தியா உயர்வாகவே புராண இதிகாசம் முதல், உலக வரலாறுகள் ஊடாக, இன்றைய தினசரிச் செய்தித் தாள் வரை சித்தரிக்கப்படுகிறது, எழுதப்படுகிறது, நம்பப்படுகிறது.
காரணம் தன்னிலும் பலமான அன்றைய இரண்டு உலக சக்திகளையும் ராம பாணம் அழித்து விட்டது. வாலியை ஒளித்திருந்து கொன்ற அதே பாணியில் இந்தியா பின் புலத்தில் மறைந்திருந்து புலிகளையும் முற்றாக அழித்து விட்டது. வாலி சுக்ரீவன் என்ற இரு சகோதரர்களையும் மோதவிட்டு மறைந்திருந்து அது வாலியையும் புலிகளையும் கொன்றுள்ளது. இருந்தாலும் ஈழக் கனவு இலட்சியம் மீண்டும் முளைக்கலாம் என்ற அச்சத்தில் அது ஈழம் என்ற சொல்லையும் அழிக்க முனைகிறது.
எனவே தமிழர்கள் ஈழத்திற்காக போராடும் பிரிவினை வாதிகள் என்ற குற்றச்சாட்டை பரப்புரை செய்தே தமிழர்களை உலக ஆதரவைப் பெற விடாது தடுத்து புலம் பெயர் தமிழர்களையும் அது அடக்கியாள முயலலாம். அது புலிகள் பயங்கரவாதம் ஈழப் பிரிவிணை போன்ற சொற்கள் இந்தியாவிற்கும தேவையாக உள்ளது.
எனவே அதற்கான சாத்தியப்பாட்டை நாமே வழங்கும் நமது செயற்பாடுகளில் மாற்றம் தேவையா என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் இல்லாத புலிகள் இருப்பதாக இந்தியா காட்ட முயல்கிறது.
ஆற்றை நீந்திக் கடப்பவன் ஒருவன் தன்னை ஒரு வெற்றுப் படகு வந்து மோதினால் அதன் மீது கோபப்பட மாட்டான். அதில் யாராவது இருந்து அதனை செலுத்தியிருந்தால் தான் அவன் மீது இவன் கோபப்பட்டு கண்டிக்க இயலும். இருந்தாலும் புலிகள் யாருமற்ற வெற்றுப் படகை இந்திய மற்றும் சிறீலங்கா கடற்படையினர் கடலிற் கண்டவுடன் சுட்டுத் தள்ளுவதைப் போல், இந்தியா ஈழம் என்ற சொல் கலைஞரின் "அரசியல்" டெசோ மாநாட்டில் பாவிப்தை எதிர்த்து அச்சத்தில் கூக்குரலிட்டது.
அதை வழக்காக சட்ட ரீதியில் உயர்திய போது அந்த நீதிபதி கூட கண்டபடி கேள்விகளை அள்ளி வீசியுள்ளார். ஆனால் படகோ வெறுமானது. அங்கு யாருமில்லை. மோதிய படகில் யாருமில்லாத போதும் அதனைப் பாரத்து திட்டித் தீர்க்கிறது இந்தியா. அண்மையில் தமிழகத்தில் ஒரு வெற்றுப்படகு காணப்பட்டவுடன் அதில் புலிகள் வந்திருக்கலாம் என்று கூட செய்திக் கதை எழுதப்பட்டது.
காரணம், புலிகளையும் பயங்கரவாதத்தையும் சாட்டாக்கி ஈழ எதிர்ப்பு அரசியலை சர்வ தேசத்திலும் தொடரவும், உலகத்தில் பரந்து பட்டு வல நாடுகளில் வாழும் ஈழத் தமிழரின் ஜனநாயகக் குரல்களைக கூட அடக்கவும், புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்று விளம்பரப் படுத்த வேண்டிய தேவை இந்தியாவிற்கும் சிறீலங்காவிற்கும் இன்னமும் உள்ளது. அதாவது தொடர்ந்து, உலகத் தமிழரை எல்லா நாடுகளிலும் உலக அரசுகளின் உதவிகளுடன், ஆதரவுடன் அடக்கி வைக்க இந்தியாவிற்கும் சிறீலங்காவிற்கும் புலி அமைப்பும், பயங்கரவாதமும் இன்னமும் தேவைப்படுகின்றது. இதனை தமிழராகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டும் இல்லாத ஒரு நிலை இந்த தமிழர் விரோத இரண்டு நாடுகளிற்கும் பலமற்ற வசதியற்ற நிலைமையே தோற்றுவிக்கும். இதனாற் தான் இந்த சொற்கள் பற்றி நான் ஏற்கனவே பிரஸ்தாபித்து வந்தேன். இன்றைய உலக சு10ழ்நிலை தமிழராகிய நமது தேவைக்கும் இலட்சியத்திற்கும் எதிராக உள்ளது. அரச பரப்புரைகளினால் இரண்டு சிங்க இலட்சணை அரசுகளும் அப்படி பயங்கரவாதிகள் என உலகை நம்ப வைத்துள்ளார்கள்.
உண்மையை மாற்றி விட்டதுமன்றி காந்தி கனவு கண்ட பாதுகாப்பான ஒரு பெண் இரவில் தனியாகசெல்லக் கூடிய ராம இராஜ்ஜியத்தை செல் அடித்து உடைத்து சிதைத்து அதன் உயிராயுதங்களான புலிகளையும் அதன் தலைமைகளையும் கொன்றொழித்துள்ளார்கள். நியாயமானவர்கள் கொல்லப்படுவது உலக வரலாற்றில் பல இடங்களில் பதிவாகியுள்ள சங்கதி தான்.
இது முள்ளிவாய்க்காலுள் நேற்றல்ல, இன்றல்ல என்றுமே மத்தியிலும் மேற்குலகிலும் கூட நடந்தே வந்திருக்கிறது. இயேசுவிற்கும் , சோக்கிரட்டீஸ்ற்கும் நடந்தது என்ன? அது தான் புலிகளிற்கும் நடந்திருக்கிறது. சாமான்ய உலகத்தார் அதீத புத்திசாலிகளை, புரிந்து கொள்வதுமில்லை விரும்புவதுமில்லை. பெரும் பணக்காரரையும், அதிக புகழ் பெற்றவர்களையும், பெரும் அறிவாளிகளையும் சாதரண உலக நிர்வாகிகள் விரும்புவதில்லை.
பெரும் இரட்சிய வீரர்கள் முன்னால் , தியாகிகள் முன்னால் பெயரிற்கும் புகழிற்கும் வெறும் சம்பளத்திற்கும் உலக சேவை செய்யும் பான் கீ மூனாலும் , யசூசி அகாஜியாலும் இன்னுமான வந்து போன ஐ நா மனித உரிமை அதிகார்களினாலும் சம்பளமின்றி உயிரையே தியாகமாக கொடுக்க தயாரான புலிகளின் முன், நடு இரவிலும் ஒரு கன்னி வன்னியில் பத்திரமாக நடமாடவல்ல அரசை நடாத்தும் பிரபாகரன் முன் எவ்வாறு நிம்மதியாக நிற்க இயலும்.
ஏந்தச் சங்கத்தில் இருப்பவர்களும் அதிக நேர்மையானவரை, அதீத அறிவாளியை உள் வாங்குவதில்லை. அவர்கள் தங்கள் செயற்குழுவில் இருந்தால் தாங்கள் அற்பமானவர்களாக தோன்றலாம் என்பதால் நல்லவர்களை வல்லவரகளை இந்த உலக செயற்குழு என்றுமே விரும்புவதில்லை. தன்னை விட பணக்காரர் மீது அல்லது பெரும் அளிவாளிமீது அல்லது புகழ் பெற்றவர் அல்லது கண்ணியமானவர்கள் மீது சாதாரண மாந்தர் அவர்கள் நல்லவரான போதும் எரிச்சல் அடைவது இதனாற் தான். அவர்களுடன் நண்பராக இருப்பவர்கள் கூடப் யுலியசீசத் துரோகம் இழைப்பது இதனாற் தான்.
இயேசு பெரும் அறிவாளியாக ஆன்மீக உச்சமாக, இரட்சகராக, நோய் தீர்க்கும் தலை சிறந்த மருத்துவராக, இறையை நோக்கிய இலட்சிய வீரரராக, உண்மையான ஆன்மீகவாதியாக ஒளியாக மன்னரிற்கெல்லாம் மன்னாதி மன்னனாக கடவுளாக வந்திறங்கிய போது இந்த பிரசங்கம் நடாத்திய மத போதகர்கள், குருமார்கள், மருத்துவர்கள், மந்திரிகள், பிரபுக்கள், அரசர்கள், நிர்வாகிகள் யாருமே அவரின் வரவை இருப்பை விரும்பவில்லை.
எனவே தான் எப்போது வருவார் என்று காத்திருந்த தீர்க்கதரிசியே " இதோ வந்து விட்டேன் மனம் திரும்புங்கள்" என்ற போது இந்த அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். திகைத்தனர். தாங்கள் செல்லாக் காசுகள் என்பதை தாங்களே தெரிந்து கொண்ட போது அவர்கள் கொதித்தார்கள் ஈற்றில் கொலை வெறி வயப்பட்டார்கள். தேவபாலனையே சிலுவையை சுமக்க வைத்து கல்வாரி மலையில் சிலுவையில் அறைந்தனர்.
அவர் இறப்பை உறுதி செய்தனர். ஆனால் உலகின் பெரும்பான்மை மக்கள் அவரது பெயரால் ஒரு மதத்தையே தொடரந்து கொண்டிருக்கின்றனர். இது போன்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு. எனவே தான் ஈழம் என்ற சொல்லையே இரணியனாக நின்று எதிர்க்கிறது இந்தியா. நாராணயநமக அல்ல தமிழன் அல்ல சிறீ லங்கன் என்று கூறு என்று மகிந்த எக்காளமிடுகிறார்.
இனிச் சோக்கிரட்டிஸ் பக்கம் வரும். சோக்கிரட்டிஸின் மனதைப் போல் பகுத்தறிய வல்ல மனது யாரிடமும் இல்லை. ஆய்வு என்பது வெறும் அறிவு மற்றும் மூளை சம்பந்தப்பட்டது மட்டுமானதல்ல. அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கூட்டிக் கழிக்க தரவுகள் உதவலாம் ஆனால் அனுமானித்து சரியாக ஊகிக்க இவற்றிற்கு மேலாக வேறு எதுவோ தேவைப்படுகிறது.
அது இருந்தவர்கள் தான் விஞ்ஞானிகள் அடங்கலாக புதியவற்றை கண்டறிந்தார்கள். இந்த வகையான அதீத கிரேக்க மனதின் கேள்விகளையே அனேக கல்விமான்களால் அன்று புரிந்து கொள்ள முடியவில்லை. சோக்கிரட்டீஸின் கேள்விகளை ஓரளவு புரிந்து கொண்டவர்கள் கூட பதில் தெரியாது விளித்தனர். சோக்கிரட்டீஸ் முன்னிலையில் தாங்கள் முட்டாள்கள் என்பதை உணர்ந்தனர்.
எனவே அவர்கள் அவரை எதிர்க்க வேண்டியிருந்து. பதில் தெரியாத பிரதானிகளும், நிர்வாகிகளும் சோக்கிரட்டீஸ் தனது அறிவினால் தங்களை முட்டாள் ஆக்குவதாக உணர்ந்தார்கள். இவர் தங்களது உலக ஒழுங்கை நாட்டு நிர்வாகக் கட்டமைப்பை உடைத்தெறியும் பயங்கரவாதியென சித்தரித்தனர். அவர்களாவது இயேசுவைச் சிலுவையில் அறைந்தனர்.
இவர்களோ சோக்கிரட்டீஸிற்கு நச்சுக் கோப்பையையே கொடுத்தனர். சிறீலங்காவோ வெள்ளைக் கொடியோடு வந்த சிங்கள தாயையும் கூடச் சுட்டுக் கொன்றது.
எனவே தான் அறிவாளிகளும், பணக்காரர்களும், திறமைசாலிகளும் இயன்றளவு சாதாரணமானவர்கள் போலவே தோற்றமளித்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் உலகத்தார் பொறாமையினால் இவர்களை ஒன்று திரண்டு எதிர்ப்பர்.
அழிக்கவும் தயங்க மாட்டார்கள். மத வாதிக்கு மதங்கள் தேவை. அரசியல்வாதிகளிற்கு கட்சிகள் அமைப்புக்கள் தேவை. மருத்துவர்களிற்கு நோயாளிகள் தேவை. இவர்களின் தேவையை இயேசு ஒருவரே நிவர்த்தி செய்தமையினால் அவர் கொல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டவையும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களே. புலிகள் மிகுந்த போர் வீரர்களாக கப்பல்களையும் தகர்க்க வல்லவர்களாக இருந்தமை தொடர்பில் அமெரிக்கா கூட கவனம் செலுத்தியிருந்து.
சிட்டுக் குருவி போன்ற சிறிய ஒரிரு விமானங்களை வைத்தே உலுக்கிய புலிகளை விட்டு வைத்திருந்தால் இன்று இந்த நாராணயசாமி இந்த வாக்கு மூலத்தை விட்டிருப்பாரா? பிரபாகரன் இருந்தால் தமிழர் யாராவது கலைஞரை உலகத் தமிழர் தலைவராக பாரப்பார்களா? புலிகளின் பலமும் கண்ணியமும் தியாகமும் தீரமும் வீரமும் தான் சாதாரண வழமைத் தழுவல் உலக தலைமைகளையும் புலிகள் மீது எரிச்சலடைய வைத்திருக்க வேண்டும். அதனால் தான் எல்லோரும் சேர்ந்து புலிப்படையையே அழித்து விடடனர். பிரபாகரன் அழிக்ப்பட்டதால் தான் மகிந்த வீரனாகத் தோற்றமளிக்கிறார்.
எனவே புலிகளாகட்டும் யாராகட்டும் தங்கள் இருக்கையை திறமைகளை பகிரங்கப்படுத்தல் விவேகமாகாது. ஏனென்றால், உலக முட்டாள்தனமும் , மடமையும் இயலாமைகளும் சாதாரண உடையணிந்து எல்லோரையும் போல தோன்றிய காந்தியைக் கூட விட்டு வைக்கவில்லையே. இராணுவ உடை அணிந்த தேர்தல் அங்கீராரமற்ற பிரபாகரனை விட்டு விடுவார்களா என்ன? புலிகள் இருந்த போது பிற தலைமைகள் யாவும் அற்பமாகவே தோன்றின.
அவரைச் சந்திக்க பல தலைமைகள் விரும்பியிருந்தன. ஒரு சாதாரண தமிழன் தீவில் இருப்பதை விரும்பாத கால் நீட்டிப் படுக்க இயலாத சிங்களம் பிரபாகரனையும் புலிகளையும் விட்டு விடுவார்களா என்ன? படகு என்னமோ வெறுமையானது தான். ஆனால் இந்த சிங்க அரசு இரண்டும் தான் வெற்றிடங்களை குற்றவாளிக் கூண்டிலும் படகிலும் புலிகளால் நிரப்ப முயல்கின்றன.
இந்தியா சார்க்கை கூட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினையை பிராந்திய ரீதியிலானதாக்கி மகா பாரத யுத்தத்தை கிருஸ்னர் பின்னின்று நடாத்தியதைப் போல், மேற்கை தள்ளி வைத்துக் கொண்டு, இந்தியா இந்தப் போரை தன் பிராந்தியத்துள் நடாத்தி முடித்திருக்கிறது. இந்த இந்தியா இப்படி ஒரு அநியாயமான போரை விரும்பிச் செய்யவில்லை. தமிழர் என்றொரு இனமுண்டு. சொற்பமாயினும் சிங்களவர் என்றொரு இனமுண்டு.
இந்தியர் என்றொரு இன முண்டா? தனி மொழி தனிப்pரதேசம் ஏதாவது இந்தியாவிற்கு உண்டா? உள்ளது சைவ வைஜ்ணவ சாக்த மதங்களிற்குள் ஓடும் இந்து என்ற ஒரு பொதுமை மட்டுமே. சுய தேசியம் இல்லாத இந்தியா கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழர்கள் திராவிட நாடு கேட்டு அமுக்கப்பட்ட நிலையில் சுய தேசியம் இல்லாத செயற்கை இந்தியா தேசியமுள்ள தமிழரின் தேசத்தை மறுக்கிறது. தமிழனிகென்றறொரு நாடு வெறும் 20 மைல் தொலைவில் அமைவதை அனுமதித்தால் என்ன ஆகும் என அது அஞ்சுகிறது.
எதிலுமே உச்சத்தில் இருப்பவன் என்றும் எங்கும் எப்போதும் சாமான்யனாக நடக்க வேண்டும் தோன்ற வேண்டும். அவன் வித்தியாசமானவனாக, உயர்வாக தோன்றினால் போதும் இந்த சாதாரண மடையர்கள் கூட்டம் அவர்களை கொன்று போட்டு விட்டுத் தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். இதைத் தான் சமாதானப் பேச்சை சந்திரிகாவும் மகிந்தவும் குழப்பிய போது இந்தியாவும் உலகும் தமிழரிற்கு செய்தன. உலகம் உருண்டை எனற உண்மையை சொன்னவனை உலகம் அடித்தே கொன்றது.
இந்த அடித்துக் கொல்லல் துடிக்கத் துடிக்கத் தொடர்கிறது. முள்ளிவாய்க்காலையும் தாண்டி……..வெளிநாடுகளில் இந்த தமிழர் அரசுகளும் அமைப்புக்களும் இதைக் கவனியாது வேறு ஏதோ முக்கியமான வேலைகளைச் செய்கிறார்கள் போலும்.
இயேசு வருகிறார் தயாராகுங்கள் என்றொரு தேவாலைய வாசகத்தை தாண்டியே தினமும் நான் பயணிக்கிறேன். உண்மையில் தீர்க்கதரிசி ஒருவரின் வருகைக்காகவே யூதர்களும் காத்திருந்தார்கள். அதுவும் பல நூற்றாண்டுகளாக நம்பிக்கையோடு காந்திருந்தார்கள். அவரே தேவ பாலனாக வந்த போது கொன்றதார்கள். காந்தி தேடிய ஒரு கன்னி நடுநிசியில் வெளியில் உலாவ வல்ல கன்னித் தமிழின் வன்னி அரசை இந்தியா கொன்றதும் இவ்வாறானதே. இராவனணை அரக்கனாக்கிய பாரதம் இன்று புலிகளை பயங்கரவாதிளாக்கி அழித்து விட்டது.
இந்தியா என்ற பெரிய தேசத்தை கட்டிக் காக்க இயலாது இன்று சாமான்யர்கள் கதி கலங்கி குழப்பத்தில் எதை எதையே எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தனி நாட்டை இந்தியா அனுமதியாது என்று ஜனநாயகவாதி எவனும் பகிரங்கமாக உரைக்கமாட்டான். ஏனென்றால் வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஜனநாயக ரீதியலான மக்ளின் ஆணை.
ஐ நா நடாத்த வேண்டியதை தந்தை செல்வா அன்றே செய்தாகிவிட்டது. எப்போதாவது அப்படியான ஒரு சர்வதேச வாக்ககெடுப்பு வந்தாலும் தமிழர் தனி நாட்டை தேர்தலில் வென்று பெற்று விடக் கூடாது என்பதற்காகவே மகிந்த தமிழ் மக்களை அழிப்பதை தடுக்காமல் உள்ளது என்ற உண்மையை புரிந்து கொள்ள நமக்கு இன்னும் எவ்வளவு காலம் தேவை?
மேலும் இந்தியாவை விவேகானந்தர் ஊடாகவும் வேத ஆகமங்களின் ஊடகவும் பாரத்து பக்தி செலுத்துவதை ஈழத் தமிழர்கள் நிறுத்த வேண்டும்.
ராம சேனையாக இந்தியப் பட்டாளத்தை கருதி மேள தாளங்களடன் அவர்களை வரவேற்றதை நினைத்துப் பார்க்க வேண்டும்.காந்தியும் புத்தரும் விவேகானந்தரும் மகான்கள் தான். ஆனால் றோ அதிகாரிகளும், இராஜாங்க அமைச்சை சேர்ந்தவர்களும் மகான்கள் இல்லை. அவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்வது தொடர்பில் ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது. ஒரு நியாயமான தமிழ் அதிகாரியின் மனைவி மற்றும் மகள் தொடர்பாக அவர் வழங்கிய உத்தரவு விசாரனைக்குரியது என் ஏன் இந்த புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் எதுவம் எண்ணவில்லையோ தெரியவில்லை. அந்த அதிகாரி இன்னமும் உயிருடன் கூட இருக்கலாம். அவரைரத் தண்டிப்பதை விட இந்த உண்மைகளை சர்வ தேச மயப்படுத்துவதில் தமிழர் கவனம் செலுத்தியாக வேண்டும் அல்லவா?
பெரிய தேசமான போதும் சிற்ய இதயம் கொண்ட இந்தியா ஏற்கனவே நலிவடைந்தாயிற்று. நாளை அரச கட்டிலேறும் ராகுலாலும், பிரியங்காவாலும் சிறீ லங்கா தலைமைகளுடன் உரையாட இயலுமா? அதன் அமைச்சர் ஜி எல் பீரிஸ் போன்றவர்களைச் சந்தித்து விவாதிக்க இயலுமா? தமிழகத்திலிருந்து வந்த நாச்சியப்பனின் அறிவையும் கனிமொழி போன்றவர்களின் இயலுமைகளையும் தான் நாம் சிறீ லங்கா பயணத்தின் போது பாரத்தோம். மேலும் இந்தியா தனது அயல் நாடுகளுடனான உறவு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட மகிந்த இந்தியாவிற்கு ஆலோசனை வழங்கிவிட்டார்.
தமிழராகிய நாங்கள் தான் குட்டப்பட்டும் வெட்டப்பட்டும் எதையும் தட்டிக் கேளாது உள்ளோம். காரணம் அதற்கேற்ற அமைப்பு ஏதும் புலம் பெயர் தேசங்களில் தமிழர்களிடம் கிடையாது. ஈழத் தமிழன் தன் தேசத்தில் உரிமையுடன் பாதுகாப்படன் வாழக் கூடாது என்று தானே மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இது பற்றி இயன்றளவு நடவடிக்கையை இவரை நோக்கி தமிழர்கள் ஜனநாயக ரீதியில் தொடர வேண்டும். ஏனென்றால் தமிழர் விரோதமாக அடிக்கடி பேசுபவராக இவர் இருக்கிறாரர்.
அதில் நியாயமும் கண்ணியமும் ஜனநாயகமும் இருந்தாற் கூடப் பறுவாயில்லை. இந்தியா என்ற பெரிய தேசத்தை கட்டியாள பரந்த இதயமுள்ள தலைமைகளினாலேயே இயலும். ஆவ்வாறான கண்ணியவான்கள் அங்கு தலைவராகும் வாய்ப்பு அங்கில்லை.
எனவே தான் ஈழத் தமிழர் மேலும் கவனமாக நகர வேண்டியுள்ளது. இதனை புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உணர்நது செயற்படுவார்களா என்பதே நம் முன்னேயள்ள இன்றைய கேள்வியாகும்.
முதற் கட்டமாக அந்தந்த நாடுகளிலும் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தலைவரகளை அடக்கி உலகளாவிய ஒரு ஜனநாயக வலைப் பின்னல் அமைக்கப்படுவதன் ஊடாகவே தமிழர் பயங்கரவாதிகள் என்ற மாயையை உலகில் போக்க இயலும். இதற்குள் அரசியல் சட்டம் மனித உரிமை அமைப்புக்களை சேரந்தவர்களையும் பேராசிரியர்டகளையும் இணைப்பது பலமளிக்க வல்லதாக இருக்கும்.
0 Responses to “இந்தியா” -பெரிய தேசம் சிறிய இதயம்: குகதாசன்