சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சதீஷ், காலரா நோயால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்ததாக அவனது பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சிறுவனை பெற்றோர்கள் அடக்கம் செய்ய முயன்றபோது, மாநகராட்சி அதிகாரிகள் ஆம்புலன்சிலேயே இடுகாட்டுக்கு கொண்டுசென்று அடக்கம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,
ஒரு அரசாங்கம் எப்படியெல்லாம் தீவிரவாத தாக்குதலை முறியடிக்க தயார் செய்ய வேண்டுமோ, அதேபோல நோய்களின் தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும். தெருவெல்லாம் குப்பைகள். குப்பைகள் அள்ளப்படவில்லை. சாக்கடைதான் குடிநீராக வந்துகொண்டிருக்கிறது.
இங்கே 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியிருக்கிறார்கள். மக்களை காப்பாற்றுங்கள். குப்பைகளை உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அள்ளுங்கள். நோய்கள் வருவதை உடனே தடுங்கள்.
காலரா இல்லை இல்லை என்று மறைப்பதற்கு பதிலாக, நோய்களை குறைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னையில் பரவி வரும் காலரா நோய் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
காலரா இல்லை இல்லை என்று மறைப்பதற்கு பதில் நோய்களை குறையுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்
பதிந்தவர்:
தம்பியன்
08 August 2012
0 Responses to காலரா இல்லை இல்லை என்று மறைப்பதற்கு பதில் நோய்களை குறையுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்