டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரத்தை உலக தமிழர்கள் நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெசோ மாநாடு குறித்து இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை அரசின் சார்பாக 6-8-2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டினை இலங்கை அரசு வன்மையாக கண்டிக்கின்றது என்றும், அந்த அரசின் சார்பில் ஊடகத்துறை அமைச்சர் ஒருவர் இந்த மாநாட்டில் பங்கேற்போர் மீது அரசு கவனம் செலுத்தியுள்ளதாக கூறியிருப்பதாகவும், செய்திகள் கிடைத்துள்ளன.
இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்ட ஒன்றாகும். இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் பேசுவது கவலையைத் தருகிறது.
இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். அதற்காகவே இந்த டெசோ மாநாடு நடைபெறுகிறது. இலங்கை அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்தத் தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத்தமிழர்களோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
டெசோ மாநாடு பற்றி இலங்கையின் தவறான பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்: கலைஞர்
பதிந்தவர்:
தம்பியன்
08 August 2012
0 Responses to டெசோ மாநாடு பற்றி இலங்கையின் தவறான பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்: கலைஞர்