இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் எரிபொருள் பகுப்பாய்வு துறைகளில் இந்திய தனியார் துறை நிறுவனங்கள்
முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பில் நிருபர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள துறைமுகங்களை தரம் உயர்த்த இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. அதற்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென இந்திய மத்திய அரசு இலங்கையிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் உற்பத்தி மண்டலம், திருகோணமலையில் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனம் அமைத்தல் என்பனவற்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். முன்னதாக ஆனந்த் சர்மா குழுவினர், இலங்கை ஜனாதிபதியை அவரது ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையில் முதலீடு செய்ய இந்திய தனியார் துறை நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன: மத்திய வர்த்தக துறை அமைச்சர்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 August 2012
0 Responses to இலங்கையில் முதலீடு செய்ய இந்திய தனியார் துறை நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன: மத்திய வர்த்தக துறை அமைச்சர்