Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.

அத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாராளமாகப் பறப்பது குறித்தும் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்துள்ளதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துகளையோ வேறெந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படவோ அனுமதிக்கப் போவதில்லையென முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது.

ஆனால் நேற்றுமுன் தினம் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் ஒலிம்பிக் கிராமம் ஒன்றிற்கருகில் ஸ்ட்ராட் பேர்ட் என்னுமிடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கி யிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை அரசின் இந்த அதிருப்தியை இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்திடம் வெளிப்படுத்துமென மேலும் தெரியவருகிறது.

0 Responses to லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com