தமிழகத்தின் சென்னையில் இன்று நடைபெறும் டெசோ ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் இல்லத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட தேசியவாத அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு கொடும்பாவிகளையும் எரித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Responses to சம்பந்தன், கருணாநிதி, மன்மோகனின் கொடும்பாவிகளும் எரிப்பு