Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் ஏற்பட்ட காதல் குறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில், ‘’ நீங்கள் முதன் முதலாக எப்போது உங்கள் மனைவிக்கு முத்தம் கொடுத்தீர்கள்’’ என்ற கேள்விக்கு,

’’மிச்செலுடன் காதல் ஏற்பட்டதும் நாங்கள் இருவரும் ஒன்றாக சுற்றினோம். 1989-ம் ஆண்டு ஒரு தடவை இருவரும் பாஸ்கின் ராப்பின்ஸ் நகருக்கு சென்றோம்.

அப்போது அங்குள்ள ஷாப்பிங் மாலில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்து சென்று அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன். அதை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் மிச்செலுக்கு முத்தம் கொடுத்தேன். இது தான் நான் அவருக்கு கொடுத்த முதல் முத்தம். அந்த முத்தம் எனக்கு சாக்லேட் போல சுவையாக இருந்தது’’என்று பதிலளித்துள்ளார்.

அவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்த ஐஸ்கிரீம் பார்லர் இப்போது சப்வே ரெஸ்டாரண்டாக உள்ளது. அவர் முத்தம் கொடுத்த இடத்தில் இப்போது ஹைட்பார்க் ஷாப்பிங் மால் உள்ளது. இந்த பேட்டி வெளி வந்ததும் அந்த ஷாப்பிங் மாலில் இந்த இடத்தில் தான் ஓபாமா- மிச்செல் முதன் முதலாக முத்தம் கொடுத்தார்கள் என்று எழுதி வைத்து உள்ளனர். இதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

0 Responses to ஒபாமா முத்தம் கொடுத்த இடம்: பார்வையாளர்கள் குவிகின்றனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com