Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமான பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முன்னாள் ஹரியானா அமைச்சர் கோபால் காந்தா டெல்லி காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

13 நாட்களுக்கு முன்னர் ஆகஸ்டு 5ம் திகதி கீதிகா ஷர்மா எனும் 23 வயது இளம்பெண், தற்கொலை செய்து கொண்டதுடன், தனது மரணத்திற்கு கோபால் காந்தாவே காரணம் என தகவல் எழுதிவைத்திருந்தார்.

இதையடுத்து கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த கோபால் காந்தா, இன்று அதிகாலை நான்கு மணியளவில் பாரத் நாகர் காவற்துறை நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார். எனினும் அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. சரண்டைந்த நிலையில் காந்தா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் காவற்துறையினரின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதே வழக்கில் , MDLR ஏர் லைன்ஸிம் மற்றுமொரு பணியாளர் அருணா சத்தா என்பவரும் காவற்துறையினரால் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கீதிகா ஷர்மா தனது இறுதிக்கடிதத்தில், கோபால் காந்தா ஒரு நயவஞ்சகன். அனைத்து பெண்களுடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பவர். அவரை நம்பியதே என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய பாவம். நன விலகிய போதும் காந்தாவும், சத்தாவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மீண்டும் அவர்களது சொந்த நிறுவனத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காதாவை தேடி, ஹரியானா ,கோவா, சிலுகுரி, மேற்கு வங்கத்தில் காவற்துறையினரின் ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. இந்நிலையில் அவரது சகோதரர் கோவிந்த் காந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கோபால் காந்தா தற்போது சரணடைந்துள்ளது தொடர்பில், கீதா சர்மாவின் சகோதரர் அங்கித் தெரிவிக்கையில் 'இது ஒரு திட்டமிட்ட சரணடைவு. அவர் தலைமறைவாகியிருந்த 12 நாட்களில், தனக்கும் கீதிகா சர்மாவுக்கும் இருந்த சகல தொடர்புகளுக்கான சாட்சியங்களையும் அழித்திருப்பார் என நான் அச்சப்படுகிறேன்.
கீதிகா ஷர்மாவின் பேஸ்புக் அக்கவுண்ட் தற்போது Deactivated ஆகியுள்ளது. காந்தாவே இந்த வேலையை செய்திருப்பார். இது தொடர்பில் டிசிபியிடம் முறையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கீதிகா ஷர்மா விமானப்பணிப்பெண்ணாக இருந்த போது கோபால் காந்தா அவருடனும் அவரது குடும்பத்துடனும் நெருங்கிப்பழகியிருந்ததுடன், கீதிகாவுடன் தனிப்படட் முறையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக முன்னர் தகவல் வெளிவந்தது. அவரது மாத சம்பளம் ரூ.60,000 ஆக இருந்ததாகவும், இது கோபால் காந்தாவுக்கான பாலியல் சேவைக்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளமெனவும் அவரது சகபணியாளர்களிடமிருந்தான தகவல் வெளியாகியிருந்தது. எப்போதும் வேலை முடிந்து சில மணி நேரங்கள் கோபால் காந்தாவின் தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கீதிகா சென்றுவிடுவார் என அவரது சக பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கீதிகா கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் தகவல வெளியாகியிருந்தது.

ஹரியானாவின் சட்டசபை உறுப்பினரான கோபால் காதா முன்னர் ஹரியானா வீடமைப்பு துறை அமைச்சர்காவும் கடமையாற்றியவர். MDLR ஏர்லைன்ஸ் எனும் அவரது சொந்த நிறுவனத்தில் கீதிகா ஷர்மா பணிபுரிந்து வந்தார்.

காணொளி

0 Responses to பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலை விவகாரத்தில் கோபால் காந்தா சரண் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com