டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ள இலங்கை புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ணவிற்கு விசா வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக விக்ரபாகு கருணாரட்ண முன்னர் அறிவித்திருந்தார். இதேவேளை ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்கஜயசூரியவுக்கும் டெசோ மாநாட்டில் பங்கேற்க விசா வழங்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு விசா கிடைத்துள்ளதா இல்லையா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
இவ்விருவரும் சிங்களவர்களாக இருந்த போதும் தமிழரர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் உட்பட பல்வேறு தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இம்மாநாடு எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்பவர்கள் நன்கு அவதானிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்ததும், அதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to விக்ரமபாகு கருணாரட்ணவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு?