Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று முன் தினம் இரவு மற்றுமொரு தமிழ் அரசியல் கைதி மரணமான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா சிறைச்சாலை தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதியான டீல்ருக்சன் ராகம வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இம் மரணத்தை கண்டித்து தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து கண்டனப் பேரணி ஒன்றை எதிர்வரும் 15ம் திகதி புதன்கிழமை யாழ் பேருந்து நிலையம் முன்பு நடத்த தீர்மானித்துள்ளன.

அமைதியான முறையிலும், ஜனநாயக முறையிலும், இக்கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாயக்கட்சி, முன்னணி சோசலிச கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளன. இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக தலைவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளும் படியும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களும், விசேட ஆதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த கணேசன் நிமலரூபன் எனும் கைதி கடந்த 4ம் திகதி உயிரிழந்திருந்தார்.

மேலும் 30 தமிழ் கைதிகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி, சிலரின் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் றாகமக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு கோமாநிலையில் இருந்த டீல்ருக்சன் எனும் இளைஞரே கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

0 Responses to மற்றுமொரு தமிழ் அரசியல் கைதியின் மரணம் : தமிழ் அரசியல் கட்சிகளிகள் கண்டனப் பேரணி நடத்த தீர்மானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com