அமெரிக்காவின் வடமேற்கு மாநில பல்கலைக் கழகத்தில் (Northwestern University) இல் கல்வி கற்று வந்த 18 வயதான 'ஹர்சா மட்டுலா' எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவன் கடந்த ஒரு வாரமாக காணாமற் போயிருந்தார்.
தற்போது உயிரிழந்த நிலையில் இவர் சடலம் இல்லினொயிஸில் உள்ள வில்மெட்டே துறைமுகத்தில் மீட்கப்பட்டுள்ளது. இரு படகுகளில் மிதந்து வந்து கொண்டிருந்த இவரது சடலத்தை கடந்த வியாழக் கிழமை ஒரு மீனவர் கண்டுபிடித்து மீட்க உதவி செய்துள்ளார். இம்மாணவன் கடந்த சனிக்கிழமை தனது நண்பர்களுடன் பல்கலைக் கழக வளாகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கடைசியாகப் பங்கு பற்றி இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கண்டு பிடிக்கப் பட்ட இம் மாணவனின் சடலத்துடன் பல்கலைக் கழக அடையாள அட்டையும், கைத் தொலைபேசியும் இவரது பாக்கெட்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்த வில்மெட்டே போலிசார் இவரது மரணத்துக்கான உறுதியான காரணத்தை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
மேலும் மட்டுலாவின் பெற்றோர் சம்பவத்தைக் கேள்விப்பட்டு நியூயோர்க்கின் லோங் ஐலன்டில் இருந்து குறித்த பல்கலைக்கு விஜயம் செய்ததுடன், $ 25 000 அமெரிக்க டாலர்களை செலவு செய்து விசாரணைக்கு உதவி செய்துள்ளனர். இவர்கள் தமது மகனைப் பற்றி மீடியாக்களுக்குப் பேட்டியளிக்கையில் மட்டுலா ஒரு புத்தகப் பிரியர் எனவும் சாகசப் பயணங்கள், விருந்துகளை அதிகம் விரும்பாதவர் எனவும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனும் ஊகங்களில் தமக்கு நம்பிக்கையில்லை. இது ஒரு கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடுவதாக கூறியுள்ளனர்.

0 Responses to காணாமல் போன இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவன் மர்மான முறையில் மரணம்