ஈராக்கில் திக்ரித் நகரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு 120 க்கு மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பியுள்ளனர்.
அல்-கைதாவினர் சிலர் சிறைக்கு வெளியே தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த சிறைக்கைதிகள் தப்பியுள்ளனர். சிறையில் உள்ள ஆயுதக்கிடங்கு உடைக்கப்பட்டு அங்கிருந்த துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு சிறைக்கைதிகள் தப்பியுள்ளனர்.
தப்பியவர்களில் 47 பேர் அல் கைதா அமைப்புடன் நேரடி தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. இதுவரை 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், 23 கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகளின் பதில் தாக்குதலில் 16 காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஈராக்கின் பாதுகாப்பு கெடுபிடிகள் மீது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to ஈராக் சிறையிலிருந்து 120 பேர் தப்பியோட்டம் : 20 பேர் பலி