பிரித்தானியாவின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மிக இளம்வயது
சிறுமியான துஷா கமலேஷ்வரன், தனது பாதிப்பிலிருந்து மெல்ல குணமடைந்துவருவதாக
பிபிசி தெரிவித்துள்ளது.
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தெற்கு லண்டனின் கடைத்தெருவொன்றில் வைத்து, கோஷ்டி மோதல் ஒன்றில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் துஷா கமலேஸ்வரன். அன்றிரவு அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், இரு தடவை அவரது இதயம் நின்று துடித்தது. எனினும் மருத்துவர்களின் கடும் முயற்சியால் உயிர் தப்பினார். 12 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது, வீடு திரும்பியுள்ளார். எனினும் அவர் நடப்பதற்குரிய சந்தர்ப்பம் மிக சொற்ப அளவிலேயே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனின் எசெக்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வரும் துஷாவை பிபிசி செய்தி ஊடகம் அண்மையில் செவ்வி கண்டது. அவர்களது வீட்டின் மேல் மாடியில் படுக்கை அறை இருப்பதால் தினந்தோரும் மாடிப்படிகளில் துஷாவை தூக்கிக்கொண்டே அவரது தந்தை மேல் - கீழ் ஏறி இறங்குவார்.
துஷாவுக்கு 7வயது ஆவதால் மற்றைய சிறுமிகளை போன்று அவரும் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளார். கணிதம் மிக பிடித்த பாடம் எனவும், எதிர்காலத்தில் வைத்தியராக வர ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 மார்ச் 29ம் திகதி இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இரு கோஷ்டியினருக்கு இடையில் நடைபெற்ற இத்துப்பாக்கிச்சூட்டின் குறுக்கில் துஷா மற்றும் ரொஷான் செல்வகுமார் ஆகியோர் அகப்பட்டுக்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று ஆபிரிக்கர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு விசாரணை நடத்திய மெட்ரோபோலியன் காவல்துறையின் மூன்று அதிகாரிகள், துஷாவின் சிகிச்சை மற்றும் அவரது வருங்காலத்திற்கு பயன்படும் வகையில் கடந்த வார இறுதியில், பிரித்தானியாவின் மூன்று உயரமான மலைகளான பென் நெவிஸ் (ஸ்கோட்காந்து), Scafell Pike (இங்கிலாந்து), Snowdon (Wales) மலையேறினார்கள். துஷாவின் பாதிப்பு, அவருக்கு வேண்டிய உதவி தொடர்பில் அவர்கள் குறித்த மலையேறும் நிகழ்வின் போது மேற்கொண்ட பிரச்சாரத்தின் பயனாக சுமார் 180,000 யூரோக்கள் அவர்களால் திரட்ட முடிந்தது. இது நேரடியாக துஷாவின் நிதி சேகரிப்பு கணக்கில் போடப்பட்டு, அவர் 18 வயதை கடந்த நிலையில் அவருக்கு பயன்படும் வகையில் சேமிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே குழுவினர் துஷாவிற்கு சிறப்பு சக்கர நாக்காலி வாங்கிக்கொடுப்பதற்கு 5,000 யூரோக்கள் நிதி திரட்டியளித்துள்ளனர்.
புலனாய்வு சிறப்பு தலைமை காவல்துறை அதிகாரி ஜின் ரெட்மோண்ட் தமது நிதி சேகரிப்பு தொடர்பில் தெரிவிக்கையில், துஷாவின் நடனமாடும் மகிழ்ச்சியையும், பின்பு ஓய்ந்து போன இன்றைய வாழ்க்கையும் பார்க்க அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என எமக்கு தோன்றியது. அவர் எதுவுமே அறியாது துப்பாக்கிச்சூட்டுக்குள் இலக்கான ஒரு அப்பாவி சிறுமி. துஷாவின் பாதிப்பு, அவரது வயது என்பவை, நாம் இதுவரை மேற்கொண்டு வந்த விசாரணைகளிலிருந்து எமக்கு வித்தியாசத்தை உணர்த்தியது. எவ்வளவு வலியிலும், சிரித்துக்கொண்டே இருப்பார். எப்போதும் நேர்மறையாக சிந்திக்க கூடிய புத்திசாலித்தனமான சிறுமி துஷா' என்கிறார்.
இந்த நிதியும், இனிமேல் எம்மால் செய்யக்கூடிய உதவிகளிலிருந்து பெறப்படும் நிதியும், துஷாவின் சிகிச்சைக்கு தேவையான மேலதிக மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்ள பயன்படலாம். துஷா மற்றையவர்களை போன்று இயல்பான தனது வாழ்வை வாழ வேண்டும். அதற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு படிநிலையும் பயனுடதாகவே இருக்கும் என மற்றுமொரு புலனாய்வு காவல்துறையினரில் ஒருவரான Det Con John Codd தெரிவித்துள்ளார்.
தற்போது துஷா தங்கியிருக்கும் வீடு, அம்மாநகர கவுன்சிலால் வழங்கப்பட்டது. அதில் தரை மாடியிலேயே துஷாவுக்கு தேவையான படுக்கை அறை, குளியல் அறைகள் என்பவற்றை அமைத்து கொடுக்க யோசித்து வருவதாக கூறியுள்ளது. துஷாவின் தந்தையார், மருத்துவமனையில் துஷாவுடன் அருகில் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தனது வேலையை ஒருவருடத்திற்கு நிறுத்தியிருந்தார்.
தற்போது துஷாவுக்கு தேவையான உடற்பயிற்சி சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது வேதனை அளிப்பதாகவும், எனினும், சில சமூகத்தினரின் உதவியினால், வாரம் ஒரு முறை ஹைத்ரோ தெரபி சிகிச்சை செய்துவர முடிகிறது எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருக்கும் போது துஷாவினால் தனது கால்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க முடிந்தது. அவரால் நடக்க கூட முடிந்தது. ஆனால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் எவ்வித முன்னேற்றமும் இல்லை. என்கிறார் அவரது சகோதரர் துஷன். இந்நிலையில் துஷாவின் சிகிச்சைகள் தொடர்வதற்கும், துஷாவின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதற்கு துஷாவிற்கு உதவ விரும்புவர்கள் நேரடியாக இங்கு தொடர்பு கொள்ளலாம்.

0 Responses to துஷாவின் புதிய வாழ்க்கை பயணமும் கைகொடுக்கும் நெஞ்சங்களும்!