விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ்லாந்திலிருந்து இயங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அமெரிக்கா தொடர்பான தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்த விக்கிலீக்ஸ், இனி உலக நாடுகள் முழுவதும் அதிக கவனம் செலுத்தும் எனவும் இதற்கென, ஐஸ்லாந்திலிருந்து செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்களின் பாதுகாப்பையும், சுதந்திரந்திரத்தையும் உறுதிப்படுத்தும் புதிய சட்டம் ஒன்று அண்மையில் ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், ஐஸ்லாந்துக்கு இடம்பெயர விக்கிலீக்ஸ் தீர்மானித்துள்ளது.
இதேவேளை புதிய விக்கிலீக்ஸில் அந்தந்த நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தமக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், பன்னாட்டு ஊடக சுதந்திர ஊடகவியலாளர்களுடன் இது நேரடி தொடர்பு பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு, அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரும் செயற்பாட்டை செய்து வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம், அமெரிக்காவின் ஈராக், ஆப்கானிஸ்தான் மீது யுத்தம் தொடுக்கப்பட்ட போது, அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரகசிய ஆவணங்களை வெளியில் கொண்டுவந்ததால் அதிகளவில் பிரபல்யம் பெற்றது.
அந்த இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தற்சமயம் பாலியல் சர்ச்சை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால் பிரிட்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவர் ஈகுவடோர் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தலைமை, சுவீடனிலிருந்து இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐஸ்லாந்துக்கு இடம்பெயர போகும் விக்கிலீக்ஸ் நிறுவனம்