Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய சூப்பர் 8 போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்தது. பிராங்கிளிங் 50 ஓட்டங்களை அதிரடியாக எடுத்தார். பந்துவீச்சில் ஃபன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ரைட் 76 ஓட்டங்களை எடுத்தார்.

இன்றைய வெற்றியை அடுத்து தனது இறுதி சூப்பர் 8 போட்டியில் இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து அணி அதிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று மே.இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மற்றுமொரு சூப்பர் 8 போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  கடந்த இலங்கையுடனான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நியூசிலாந்துக்கு மீண்டும் தோல்வி - இங்கிலாந்து அபாரவெற்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com