Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் கடந்த 22ம் திகதி அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனம் தாக்கப்பட்டதன் பின்னணியில் இராணுவம் இருப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தும் தாக்குதல் குறித்து இதுவரை எவரும் ஏன் கைது செய்யப்படவில்லை என நவ சமசமாஜக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உப தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் நவ சம சமாஜக் கட்சி பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் பயணித்த வாகனங்கள் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ள விக்ரமபாகு கருணாரத்ன, தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு பணித்துள்ளார்.

அதிக இராணுவ நடமாட்டம் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் தாக்குதலின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென விக்ரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

தாக்குதல் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என விக்ரமபாகு கருணாரத்ன பொலிஸ் மற்றும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 Responses to வாகனங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவம்! - விக்கிரமபாகு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com