Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியன் பிரீமியர் லீக்கில், ஐதராபாத்தின் டெக்கான் சார்ஜஸுக்கு பதில் புதிய அணியை மாற்றீடு செய்ய கோரப்பட்ட ஏலத்தில் சன் டி.வி வெற்றி பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

சன் டிவி நெட்வோர்க், வருடத்திற்கு ரூ 85.05 கோடி என்ற ரீதியில், ரூ 300 கோடி பெறுமதியில் ஐதராபாத் ஐபிஎல் அணியை வாங்குவதற்கு இணங்கியுள்ளது. கடும் போட்டியாக காணப்பட்ட PVP Ventures, வருடத்திற்கு ரூ. 69.03 கோடிக்கு பேரம் பேசியதால் சன் டிவியிடம் தோல்வி கண்டது.

 இதன் மூலம் ஐபிஎல் 6வது தொடர்பில் சன் டிவி நெட்வோர்க் சார்பில் ஐபிஎல் அணியொன்று களமிறக்கப்படவுள்ளது. நொய்டா, கட்டக், கொச்சி, இந்தோர், அஹ்மதாபாத், ராஞ்சி, அல்லது விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்களில் ஏதாவது ஒரு நகரத்தை மையமாக கொண்டு புதிய ஐபிஎல் அணியை
உருவாக்கும் பிசிசிஐ முன்னர் யோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நஷ்டத்தில் சென்றதாலும், வீரர்களுக்கு உரிய சம்பள பாக்கி கொடுக்கப்படாததினாலும்,  டெக்கான் சார்ஜஸ் அணியை ஐபிஎல் இலிருந்து நீக்கியது பிசிசிஐ.

இதையடுத்து புதிய அணிக்கான பேரம் பேசலில் பல நிறுவனங்கள் போட்டியிட்டன. பிவிபி வென்டூர்ஸ், ஜெய்பீ குரூப், ஆகியனவும் இம்முயற்சியில் களமிறங்கியிருந்தன.

0 Responses to ஐபிஎல் : புதிய அணியை களமிறக்குகிறது சன் டிவி குழுமம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com