Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன், கப்டன் சரத்பாபு ஆகியோரினதும், மட்டக்களப்பில் காவியமான லெப். அருள்மதன் என்ற மாவீரரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

24.10.200 அன்று “ஓயாத அலைகள் - 4” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின்போது
கரும்புலி மேஜர் சோபிதன் (துரைச்சாமி ஜீவகணபதி - மூன்றுமுறிப்பு, வவுனியா)

கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்)  (வடிவேல் தங்கத்துரை - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

கரும்புலி கப்டன் சந்திரபாபு  (குமரப்போடி லிங்கராசா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)  ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு காமினிபுரம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்

லெப்டினன்ட் அருள்மதன்  (வேலுப்பிள்ளை ஜீவராஜ் - மாணிக்கமடு, அம்பாறை)  என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

1 Response to நாகர்கோவிலி​ல் காவியமான மூன்று கரும்புலிக​ளின் 12ம் ஆண்டு நினைவு நாள்!

  1. மாவீரரே எம் வீர வணக்கஙகள்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com