Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா - மிச்செல் இருவரும் விவாகரத்து செய்வதற்கு பத்திரம் தயார் செய்ததாக வெளிவந்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2000ம் ஆண்டு சிகாகோ சட்டபேரவையில் ஆசனமொன்றை வெல்ல முடியாது தோல்வி அடைந்ததை அடுத்து, ஒபாமாவும், மிச்செல்லும் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாகவும், இது தொடர்பிலான தகவல்கள் நாளை டொனாட் ட்ரியும்ப் மூலமாக வெளியிடப்படும் என டக்ளஸ் காஸ் எனும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரும் வர்த்தக புள்ளிகளில் ஒருவரும், தொலைக்காட்சி நிருபருமான டொனால்ட் ட்ரியும்ப் (Donald Trump) உடன் நேற்று சி.என்.பி.சி தொலைக்காட்சி நிகழ்வொன்றில் டக்ளஸ் காஸ் கலந்து கொண்ட போதே இது பற்றி கேள்விப்பட்டதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே உள்ள நிலையில் தமது இறுதி சூறாவளி பிரச்சாரத்தில் ஒபாமா மற்றும் ரூம்னி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒபாமாவின் விவாகரத்து விவகாரம் வெளிவந்ததிருக்கிறது. இத்தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இம்முறை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

ஏற்கனவே The Amateur எனும் புத்தகத்தில், மிசெல் ஒபாமா விவாகரத்துக்கு ஆர்வம் காட்டியது தொடர்பில் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும் 2005 இல் இலினோயிஸ் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து வாழ்வதில் நம்பிக்கை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது நாள்வரை, விவாகரத்துக்கு முடிவெடுத்த ஜோடி, அரசியல் லாபங்களுக்காக பொய்யாக சேர்ந்து வாழ்ந்துவந்திருக்கிறார்கள் என இப்போதே ரூம்னியின் ஆதரவாளர்கள் பிரச்சாரத்தை தொடக்கியிருக்கிறார்கள்.

ஒபாமா - மிச்செல் திருமணம் முடித்து 20 வருடங்களுக்கு மேல் ஆவதுடன், மாலியா (14), சாஷா (11) என இரு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாரக் ஒபாமா - மிச்செல் விவாகரத்துக்கு முனைந்தார்களா?: சர்ச்சையை கிளப்பும் புதிய செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com