Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும்  தெரியவருகிறது.

இந்த மாநாட்டின்போது இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அரச படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொலி ஆதாரங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அரசு இது தொடர்பில் முழுமையான அச்சத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அறியவந்துள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் கொலை மற்றும் மூதூரில் இடம்பெற்ற தொண்டு பணியாளர்களின் படுகொலை போன்றவை தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் அரசு ஆரம்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்துவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

1 Response to 2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்!

  1. இம் முறை கொலைவெறி அரசின் எந்த கண்துடைப்பும் சபை ஏறாதென்றே நம்புவோம். நிச்சயமாக இந்த அழிவுகளுக்கான தண்டனை சிஙகள பேரினவாதம் பெற வேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com