Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 19 மாதங்களாக சிரியாவின் இடம்பெறும் மக்கள் யுத்தத்தில் இதுவரை 28 000 பொது மக்கள் வரை காணாமற்
போயிருப்பதாக அங்கிருக்கும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இதில் பல பொது மக்கள் வீதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக அரச படைகளாலும் இராணுவத்தாலும் கடத்தப் பட்டவர்கள் எனவும் அவர்களின் கதி என்ன ஆனது என இதுவரை தெரியாது எனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதனால், கடத்தப் பட்டவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிலமை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதேவேளை கடத்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் ஏனையவர்கள் சிரிய சிறைச் சாலைகளில் அல்லது இரகசிய தண்டனைக் கூடங்களில் அடைக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது. மேலும் இவ்விடங்களில் இவர்கள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றனர் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இன்னொரு தரப்பினர், கடந்த வருடம் 2011 மார்ச்சில் சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாட்டுக்கு எதிராக தோன்றிய மக்கள் எழுச்சியில் இதுவரை காணாமற் போனவர்கள் தொகை 80 000 இற்கும் அதிகம் என நம்புகின்றனர்.

சிரியாவில் மக்கள் காணாமற் போவது இது புதிதல்ல.ஏற்கனவே அஸ்ஸாட்டின் தந்தை ஹஃபேஸ் இன் ஆட்சிக் காலத்தில் (1979 - 1982) கிளம்பிய மக்கள் புரட்சியில் 7000 பேர் காணாமர் போயிருந்தனர்.

ஆர்ஜென்டினாவுடனான 1977-83 இல் நிகழ்ந்த யுத்தத்தில் 30 000 பேர் வரை காணாமற் போயிருந்தனர். அல்ஜீரியாவுடனான மக்கள் யுத்தத்தில் (1992-97) 17 000 பேர் வரை வலுக்கட்டாயமாக கடத்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to சிரிய யுத்தத்தில் காணாமற் போனவர்கள் தொகை 28 000

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com