Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலேசிய அடர்ந்தகாட்டுக்குள் விழ்ந்து விபத்துக்குள்ளான இங்கிலாந்து ஏர்போர்ஸ் விமானத்தைச்சேர்ந்த விமானப்படையினரின் உடல்கள் 67 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

1945ம் ஆண்டளவில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இங்கிலாந்து ராயல் ஏர்போர்ஸ் விமானத்தில் 8 விமானப்படை வீரர்கள், போர்க் கைதிகளை இறக்கி விடுவதற்காக கோகோஸ் தீவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது அவ் விமானம் மலேசிய எல்லையை கடக்கும் போது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தகவல் தெரியாது போனது. பின்னர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என சந்தேகத்தில் தேட தொடங்கியபோது 1991ல் அந்த விமானத்தின் பாகங்கள் மலேசியாவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் 2007ம் ஆண்டில் மனித உடல்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது அவை அடையாளம் காணப்படாமல் போனதாகவும் 3வருடங்களுக்கு பிறகே தற்போது இணங்காணப்பட்டு, அவை இங்கிலாந்து விமானப்படை வீரர்களின் உடல்களே என உறுதிப் படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து நேற்று மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இவ் வீரர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உட்பட்டோர் விமானப்படை வீரர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செய்தனர், பின் ராணுவ மரியாதையுடன் அவர்களின் உடல் பாகங்கள் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் உள்ள ராணுவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

0 Responses to இங்கிலாந்து விமானப்படை வீரர்களின் உடல்கள் 67 ஆண்டுகளுக்கு பின் அடக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com