Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் மரணதண்டனை நீக்கப்பட வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நடைபெறுகின்றன. இதில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் இந்த கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழு விஷேட அறிக்கை ஒன்றில் தயாரித்து ஐ.நாவுக்கு வழங்கியுள்ளது. இதில் மரண தண்டனை அமலாக்கம் இரத்து செய்யப்பட வேண்டிய அவசியமும், சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைவாக நாட்டின் மனித உரிமை சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியமும் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாமஹவேவா தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையில் மரண தண்டனையை இல்லாது ஒழிக்குமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com