Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடந்த மூன்றுவருட வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கும், மத்திய அரசு ரூ.1880 கோடி செலவழித்துவிட்டதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். எமது அரசு கட்டுகடங்காது செலவழிப்பதாக காங்கிரஸ் தோழர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடைசி மூன்று வருடங்களுக்கான வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.1,880 கோடியாக உள்ளது. இது பொதுமக்களின் அரச கருவூல நிதியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. இதனை உண்மை இல்லை என்று மறுக்க முடியுமா எனகேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில தேர்தலையொட்டி குஜராத் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடி சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பாவநகர், ஜம்நகர், ஜுனாகத், ராஜ்கோட் ஆகிய தொகுதிகளுக்கு வருடத்திற்கு செலவிடும் தொகையை விட சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணங்களின் போது, செல்வந்த ஹோட்டல்களுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. டெல்லி சுல்தான்களிடம் இது பற்றி கேட்க விரும்புகிறேன். ஏழை மக்களின் பணத்தை இவ்வாறு அனாவசியமாக செலவழிக்க அனுமதிப்பதன் கட்டாயம் என்ன?

பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே இவ்வாறான சிறப்பு சலுகைகள் உண்டு. ஒரு எம்.பியாக இருந்து கொண்டு சோனியா காந்தியால் இவ்வாறு பணம் எடுத்து செலவழிக்கும் தேவை என்ன? என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாநில தேர்தலை முன்னிட்டு சோனியா காந்தியும் எதிர்வரும் புதன்கிழமை முதல், காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

0 Responses to சோனியா காந்தியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கென மத்திய அரசு ரூ.1880 கோடி செலவு: மோடி குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com