Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை இன்று முற்றுகை இடப்போவதாக அறிவித்ததை அடுத்து, சென்னை தலைமை செயலகம் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் போராட்டத்தில் கைது செய்யப் பட்ட அப்பாவி மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கூடங்குளம் போராட்டக் காரர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இதை அடுத்து சென்னையில் சுமார் 100 இடங்களில் ஆங்காங்கே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை, ஹோட்டல் அறைகளில் சோதனை என்று சோதனைகள் தொடர்கின்றன. இந்நிலையில் தாம்பரம், நீலாங்கரை  உள்ளிட்ட சென்னையின் பல்வேறு நுழைவுப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.

போராட்டக் காரர்கள் சென்ன எழும்பூர் ராஜரத்தினம் நினைவு மண்டபம் அருகே கூடி, தலைமை செயலகத்தை பாதயாத்திரை மூலமாக முற்றுகையிட அனுமதி பெற்றுள்ளனர். இதை அடுத்து எழும்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன அசம்பாவிதங்கள்  ஏதும் நடக்கக் கூடாது என்பதில் காவல்துறை மிகத் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது.

0 Responses to தலைமை செயலகத்தை இன்று முற்றுகையிடப்போகும் கூடங்குளம் போராட்டக்காரர்கள்: போலீசார் குவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com