Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறிவிட்ட சூழலில் கடலூரில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடலூர், திருவாரூர், நாகப் பட்டினம் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்  தீர்த்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு மழைத் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை கொட்டித் தீர்க்கிறது. இந்நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. இதை அடுத்து சென்னை வானிலை மையம், கடலூர் மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன  மழை பெய்யும் என்றும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அங்கங்கு அவ்வப்போது மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

0 Responses to கடலூரில் புயல் எச்சரிக்கை: விடியவிடிய மழை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com